திடீரென தங்கத்தை விற்று தள்ளும் சீனர்கள்.. இனி தங்கம் விலை தாறுமாறா சரிய போகிறதா?

உலகிலேயே அதிகளவு தங்கத்தில் வர்த்தகம் செய்யும் ஒரு நாடு சீனா. இதுநாள் வரை தங்கத்தை வாங்கி குவித்து வந்த சீனர்கள் திடீரென அவற்றை விற்று தள்ள தொடங்கியுள்ளனர். உலக தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த தலைகீழ் மாற்றத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

உலகளவில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை இறங்குமுகமாகவே இருக்கிறது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4000 டாலருக்கும் கீழ் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவதற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றமே காரணம் என தெரிய வந்துள்ளது.

திடீரென தங்கத்தை விற்று தள்ளும் சீனர்கள்.. இனி தங்கம் விலை தாறுமாறா சரிய போகிறதா?

சீனா மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் நிலைப்பாடுகள் தான் தங்கம் விலை போக்கையே நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் மீண்டும் ஒரு வட்டி உயர்வு நடவடிக்கை இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று அந்த பணத்தை பத்திரங்களி முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து வருகிறது.

அதே வேளையில் சீனாவில் சில்லறை மற்றும் ஊக வணிக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தாங்கள் வைத்துள்ள முதலீடுகளை விற்று பணமாக்கி வருகின்றனர். இதுவும் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து விலை சரிய காரணம் என தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் சீனர்கள் தாறுமாறாக தங்கம் வாங்கினர், சீனா அரசும் மக்கள் தங்கம் வாங்குவதை ஊக்குவித்தது.

Also Read

இந்நிலையில் சீன அரசு சமீபத்தில் தங்க வர்த்தகம் மீதான சில நீண்டகால வரி சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளை திரும்பப் பெற்றது. குறிப்பாக, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் வாங்கும் தங்கத்தை சில்லறை வர்த்தகர்கள் விற்பனை செய்யும் போது மதிப்பு கூட்டு வரியில் இருந்த விலக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

இதனால் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வரி சுமை அதிகரித்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் உள்நாட்டு வரி பாக்கிகளை செலுத்துவதற்கு வேறு வழியின்றி, தங்கத்தின் மீது செய்திருந்த முதலீடுகளை விற்று பணமாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகின் முதலாவது பெரிய தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தங்கத்தின் தேவையை குறைத்துவிட்டது. அதிகளவிலான தங்கம் சந்தையில் இருப்பதால் விலை குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் நாணய கொள்கை மாற்றங்களையும், டாலரின் மதிப்பு சரிவையும் எதிர்பார்த்து தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக குவித்தனர். ஆனால், சந்தை நிலவரங்களில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் மற்றும் சீன அரசின் புதிய கொள்கை மாற்றங்கள் காரணமாக, தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பலரும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் உலக சந்தையில் சில காலம் தங்கம் விலை சரிவிலேயே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+