ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், சந்தையின் வர்த்தகத்திற்கு பின்னால் ஒரு முக்கிய மாற்றம் உருவாகி வருகிறது. உலக நாடுகள் தங்களிடம் உள்ள தங்க கையிருப்புகளை விற்பனை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், அந்த விற்பனையை உறிஞ்சிக் கொள்ளும் ஒரே பெரிய சக்தியாக சீனா மாறியுள்ளது.
இந்த மாற்றம் தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யும் மிகப்பெரிய சக்தியாக இருக்க போகிறது என்பது பலருக்கு தெரிவது இல்லை. இந்த விஷயத்தை தெரிந்துக்கொண்டால் தங்கத்தில் எப்போது முதலீடு செய்தால் பெரிய லாபத்தை பார்க்க முடியும் என்பதை எளிதாக புரிந்துக்கொள்ள முடியும்.

சீனா
சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனா கடந்த 16 மாதங்களாக இடைவிடாமல் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது சீனாவின் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவித்தது தான். உலக நாடுகள் தங்கள் தங்க கையிருப்புகளை குறைத்து டாலராக மாற்றி வரும் நிலையில், சீனா மட்டும் தொடர்ந்து தங்கத்தை சேமித்து வருவது சந்தையில் தனித்துவமான நிலையை உருவாக்கியுள்ளது.
உலகளவில் அதிக தங்க கையிருப்பு வைத்திருக்கும் நாடாக விளங்கும் அமெரிக்கா சுமார் 8000 டன் தங்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு பிறகு சீனா சுமார் 2300 டன் தங்கத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த அளவானது அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இருந்தாலும், உண்மையான கையிருப்பு இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சீனாவின் அந்நிய செலாவணி
சீனாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 3 டிரில்லியன் டாலர் அளவில் உள்ளது. இதில் வெறும் 210 பில்லியன் டாலர் மட்டுமே தங்கமாக உள்ளது. இதன் பொருள், மொத்த கையிருப்பில் சுமார் 7% மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 93% இன்னும் தங்கமாக மாற்றப்படாமல் உள்ளது என்பது முக்கிய தகவல்.
இந்த நிலைமையே எதிர்காலத்தில் தங்கத்திற்கு பெரிய ஆதரவாக மாறக்கூடும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில், சீனா தனது கையிருப்பில் ஒரு சிறிய பகுதியையே தங்கமாக மாற்றினாலும் கூட, உலக சந்தையில் தங்கத்தின் தேவை திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

US Treasury Bonds விற்பனை
சீனா தற்போது மேற்கொண்டு வரும் இன்னொரு முக்கிய நடவடிக்கை அமெரிக்க அரசின் டிரஷரி பாண்டுகளை அதாவது அரசு பத்திரங்களை விற்பனை செய்வதாகும். ஏறக்குறைய 700 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க பாண்டுகளை வைத்திருந்த சீனா, அதை மெதுவாக சந்தையில் வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது.
இந்த நடவடிக்கை வெறும் முதலீட்டு மாற்றம் அல்ல; இது ஒரு பெரிய திசை மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. டாலர் அடிப்படையிலான சொத்துகளில் இருந்து வெளியேறி, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு மாறும் முயற்சியை சீனா கையில் எடுத்துள்ளது. இதற்கான முதல் படி தான் அரசு பத்திரங்களை சீனா விற்பது என்பது.
தங்கம் விலை ஏன் உயரும்
சீனா தனது கையில் இருக்கும் 700 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பத்திரத்தை விற்று வரும் பணத்தை தங்கம் வாங்க பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, 700 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கம் வாங்கப்பட்டால், தற்போதைய விலையை விட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை தங்கம் விலை உயரக்கூடும் என கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை 20000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரையில் செல்லக்கூடும் வாய்ப்புகளும் எதிர்காலத்தில் உருவாகலாம்.
ஏற்கனவே அமெரிக்கா தன்னிடம் இருக்கும் தங்கத்தை டிஜிட்டல் டோக்கனாக மாறி கிரிப்டோ சந்தையில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தங்கம் மீதான வர்த்தகம் அதிகரித்து விலையும் அதிகரிக்கும். அமெரிக்காவும் தன்னிடம் இருக்கும் தங்கத்தை வைத்து தான் கடன் சுமையை குறைக்க திட்டமிட்டு வருகிறது என்பது மற்றொரு முக்கியமான விஷயம்.
இதன் மூலம் ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது - தற்போதைய தங்க விலை சரிவு ஒரு தற்காலிக நிலையாக இருக்கலாம். நீண்டகாலத்தில் தங்கத்திற்கு மீண்டும் வலுவான உயர்வு வரக்கூடும்.

முதலீட்டாளர்களுக்கு என்ன பாடம்?
தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைந்து கொண்டிருப்பது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தினாலும், சந்தையின் அடிப்படை இயக்கங்களை பார்த்தால் இது ஒரு வாய்ப்பாக மாறக்கூடும். உலக நாடுகள் தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்யும் நிலையில், சீனா போன்ற பெரிய வாங்குபவர்கள் சந்தையில் இருப்பது தங்கத்திற்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது.
அதனால், திடீர் முடிவுகள் எடுக்காமல், விலை குறையும் காலங்களில் மெதுவாக சேமிப்பு முறையில் தங்கம் வாங்குவது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கு சீனா டாலருக்கு பதிலாக தங்கத்தை தனது அந்நிய செலாவணி கையிருப்பாக மாற்றும் முடிவை எடுத்தது தான். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க பொருளாதாரம் பெரும் கடன் சுமையில் இருக்கும் நிலையில் தற்போதைய ஈரான் போர் கூடுதலாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வரும் காலத்தில் டாலர் மதிப்பும், அமெரிக்க பொருளாதாரமும் பெரிய அளவில் சரியவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை சீனா மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் தீவிரமாக நம்புகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் சீனா தனது நிதி ஆதாரத்தை தங்கமாக மாற்ற முடிவு செய்து வருகிறது.
ஏற்கனவே அடுத்த 2-3 ஆண்டுகளில் பணிவீக்கம் அதிகம் காரணமாகவும், ஏஐ தாக்கம் காரணமாகவும் ரெசிஷன் வரும் என கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் தங்கம் முக்கிய சொத்தாக மாறும் என்பது தான் உண்மை.
தங்கம் விலை குறைவது ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல; அது ஒரு சிக்னல். உலக பொருளாதார மாற்றங்கள், நாணய மாற்றங்கள் மற்றும் பெரிய நாடுகளின் முதலீட்டு முடிவுகள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து தங்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. இந்த சூழலில் சீனாவின் நடவடிக்கைகள் தான் அடுத்த கட்ட தங்க விலை உயர்வுக்கு முக்கிய இயக்கியாக மாறக்கூடும்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்



Click it and Unblock the Notifications