இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகத் தடுமாறி வருகிறது இந்தத் தடுமாற்றத்தை இடைக்காலப் பட்ஜெட் அறிவிப்புகள் கணிசமாக சரி செய்தாலும் முழுமையாக மீண்டு வளர்ச்சி பாதைக்குத் திரும்பவில்லை. திங்கட்கிழமை வர்த்தகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய நிலையில் சரிவுடன் முடிந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிலையான வர்த்தக உயர்வுடன் துவங்கியுள்ளது.
சீனாவில் நடந்த ஒரு சம்பவம் இந்தியச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. சீனா பங்குச்சந்தை பெரும் சரிவில் இருக்கும் வேளையில் அந்நாட்டு அரசு, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாகப் பெரும் தொகையை முதலீடு செய்து பங்குச்சந்தை சரிவை மீட்டு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் பங்குச்சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகத் தொகையை முதலீடு செய்தது. இதனால் சீன நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கீடு அதிகரிக்கும் சூழ்நிலை உருவானது.
இதை தடுக்கச் சீனா உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் பங்குபெற கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் திட்டமிட்டபடி குறித்த பங்குகளில் முதலீடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் சீன சந்தையில் செய்யத் திட்டமிட்டு இருந்து பல பில்லியன் டாலர்களைப் பிற சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதேவேளையில் கடந்த 20 வருடத்தில் சீனாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் பெரும் தொகையை சீன சந்தையில் முதலீடு செய்தனர்.
தற்போது சீனாவில் விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்குப் பெரும் நெருக்கடியாக இருக்கும் காரணத்தால், சீனாவில் இருந்து வெளியேற்றப்படும் பெரும் தொகையை இந்தியாவுக்கு திருப்பத் திட்டமிட்டு உள்ளனர்.
கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி அடுத்த 10 வருடத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் தொடர்ந்து நம்பிக்கை அளித்து வரும் வேளையில், இந்தியா முக்கிய முதலீட்டுச் சந்தையாக மாறியுள்ளது.
இது இந்திய பங்குச்சந்தையில் Gold Rush காலம் என்று சித்தரிக்கப்படுகிறது, ஆனால் இதன் உண்மைத் தன்மையை அடுத்த 2 வார வர்த்தகத்தில் தெரிந்துகொள்ள முடியும். அமெரிக்கா, சுவிஸ், ஜப்பான் முதலீட்டு அமைப்புகள் இந்தியாவை டார்கெட் செய்து முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications