உலக அளவில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டு சரிவடைந்து தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில் தான் சீனாவின் ஒரு நடவடிக்கை உலகம் முழுவதுமே பேசு பொருளாக மாறி இருக்கிறது.
2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதற்கு முக்கிய காரணமே சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கியதுதான். வழக்கமாக மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது வாடிக்கை தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது சற்று அதிகரித்திருக்கிறது. இதில் முன்னிலையில் இருப்பது சீனா தான்.

அமெரிக்க டாலரை வலுவிழக்க செய்ய வேண்டும், தங்கள் நாட்டு நாணயத்தை வலுப்பெற்றதாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதிக அளவில் தங்கத்தை வாங்கி வைக்க தொடங்கியது சீனா. அதிகாரபூர்வமாகவும் அதிகாரபூர்வமற்ற முறையிலும் டன் கணக்கில் சீனா தங்கத்தை வாங்கியதுதான் உலக தங்கச்சந்தையிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சீன மத்திய வங்கி தொடர்ந்து 15ஆவது மாதமாக தங்கத்தை வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி சீன மத்திய வங்கியிடம் 74.19 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸ் தங்கம் இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. இது முந்தைய மாதத்தில் 74.15 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸ்களாக இருந்தது. அதாவது தற்போது சீனா வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு டிசம்பர் மாத இறுதியில் 319 பில்லியன் டாலராக இருந்தது அதுவே இந்த மாதம் 369.58 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.

உலக அளவில் அமெரிக்கா உடனான வர்த்தக மோதல்கள் மற்றும் பல்வேறு பொருளாதார பதற்றங்களில் சிக்கிய சீனா இனிவரும் நாட்களில் இது போன்ற மோதல்களில் இருந்து பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் டாலரை சார்ந்து இருப்பதை நிறுத்த வேண்டும் தங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தின் இருப்பை அதிகப்படுத்த வேண்டும் என முடிவு செய்து தொடர்ந்து 15 வது மாதமாக தங்கத்தை வாங்கி இருக்கிறது.
சீன மத்திய வங்கி மட்டுமல்ல அந்நாட்டு பொதுமக்களும் அதிகமாக தங்கத்தை வாங்க வேண்டும் என கூறியிருந்தது. சீனாவை பொருத்தவரை ஈடிஎஃப் முதலீடுகளைக் கடந்து தங்கத்தை உலோகமாகவே வாங்கி வைக்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது. வெள்ளியும் கூட சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைகளை விட கூடுதல் விலை கொடுத்து மக்கள் உலோகங்களாக வாங்கி வைக்கிறார்களாம்.
எதிர்காலத்தில் தங்கமும் வெள்ளியும் பேப்பர் சொத்துகளாக இருப்பதை விட உலோக முறையில் கையில் இருப்பதுதான் பாதுகாப்பு என்பதற்காகவே சீனர்கள் இப்படி ஒரு உத்தியை கையாளுகின்றனர் என ராபர்ட் கியோசாகி கூறி இருந்தார். இந்நிலையில் சீன அரசாங்கம் தங்கத்தை வாங்குவதை நிறுத்தவே இல்லை என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்திருப்பதால் இந்த ஆண்டும் இது தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்துவதற்கான முக்கிய காரணியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே போலந்து உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் இந்த ஆண்டு கூடுதலாக தங்கம் வாங்குவது என முடிவு செய்திருக்கின்றன. உலக சந்தையில் மத்திய வங்கிகளுக்கான தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் போது அதன் விலையும் நிச்சயம் அதிகரிக்கும். ஏற்கனவே அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருக்கிறார். அவர் எப்போது என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்மால் கணிக்க முடியாது. அவரும் தன் போக்கிற்கு ஏதாவது ஒரு வர்த்தக மோதலையோ புவிசார் பதற்றத்தையும் ஏற்படுத்தி விட்டால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதை நம்மால் தடுக்கவே முடியாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications