சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய கடன் செயலிகள் மற்றும் முதலீட்டு டோக்கன்களுக்கு எதிராக அமலாக்க துறை பல இடங்களில் சோதனை நடத்தியது.
அமலாக்க துறை Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகிய முன்னணி பேமெண்ட் சேவை மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.46.67 கோடி மதிப்புள்ள பணத்தை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நிதி முடக்கப்பட்டுள்ளது.
கடன் மோசடி
இந்தியாவில் கடன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முதல் கட்ட ஆலோசனை மற்றும் ஆய்வில் பெரும்பாலான இந்தக் கடன் செயலிகளை இணைய வாயிலாகச் சீன நிறுவனங்களும், சீனர்களும் இந்தியாவில் நடத்தி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டது.
சீன செயலிகள்
இந்த நிலையில் சீன செயலிகளுக்குத் தொடர்புடைய செயலிகளின் பணத்தை முடக்க அமலாக்க துறை டிஜிட்டல் பேமெண்ட் சேவை அளிக்கும் இந்திய நிறுவனங்களான Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகிய நிறுவனங்களில் அமலாக்க சோதனை நடத்தி தற்போது 46.67 கோடி ரூபாய் அளவிலான நிதியை முடக்கியுள்ளது.
செப்டம்பர் 14
இந்தக் கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுபவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான டெல்லி, மும்பை, காசியாபாத், லக்னோ மற்றும் கயா ஆகிய இடங்களில் செப்டம்பர் 14 ஆம் தேதி சோதனைகள் தொடங்கப்பட்டன.
சீன கடன் செயலி
இதைத் தொடர்ந்து சீன கடன் செயலி மற்றும் HPZ எனப்படும் மொபைல் செயலி அடிப்படையிலான டோக்கன்-கள் தொடர்பாக டெல்லி, குருகிராம், மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பெங்களூரு பகுதிகளில் சுமார் 16 வங்கிகள் மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டது.
நாகாலாந்து வழக்கு
இந்தச் சோதனைக்கு அடிப்படையாகத் துவங்கியது 2021 அக்டோபரில் நாகாலாந்தில் உள்ள கோஹிமா காவல்துறையின் பணமோசடி தொடர்பாகச் சைபர் கிரைம் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான்.
46 கோடி ரூபாய் பணம்
அமலாக்க துறையின் இந்தச் சோதனையில் புனேவில் உள்ள ஈஸ்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.33.36 கோடியும், பெங்களூரில் உள்ள ரேஸர்பே சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.8.21 கோடியும், பெங்களூரில் உள்ள கேஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.1.28 கோடியும், டெல்லியில் உள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.1.11 கோடியும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications