Cigarette Price Hike: மத்திய அரசு சிகரெட் மீதான கூடுதல் கலால் வரி விதிப்பை பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு கொண்டு வந்ததால் இதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விஷயம் என்றாலும் சிகரெட் நிறுவனங்கள் புதிய விலை கொண்ட தயாரிப்புகளை இன்னும் சந்தைக்கு கொண்டு வரவில்லை, இதை வைத்து விற்பனையாளர்கள் மக்களிடம் பெரும் தொகையை கொள்ளையடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வந்த கலால் வரி விதிப்பால் பத்து சிகரெட் கொண்ட ஒரு பாக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.22 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. இது சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிகரெட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வாகும்.

இது மட்டுமா, பிரீமியம் சிகரெட்டுகள் அதாவது 76 மி.மீ நீளம் கொண்ட சிகரெட் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு பாக்கெட்டுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் பிராண்டுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு மாறுபடுகிறது என்று டிஸ்ட்ரிபியூட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தியாளர்கள் புதிய அதிகபட்ச சில்லறை விலை (MRP) அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை முதலே பழைய ஸ்டாக்கை புதிய விலையில் விற்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தற்போது உள்ள பழைய ஸ்டாக் மீது 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு புதிய விலையில் டீலர்களுக்கு பில்லிங் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பழைய பொருட்களுக்கு மக்கள் அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
மேலும் நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு 8,000 முதல் 9,000 ஸ்டாகிஸ்ட்கள் உள்ளனர். இதேபோல் 4.5 லட்சம் டிஸ்ட்ரிபியூட்டர்களும், 1.3 கோடி ரீடைல் கடைகள் இந்தியா முழுவதும் உள்ளது.
இந்த கலால் விலை உயர்வால் சிகரெட் கடத்தல் மற்றும் போலி பொருட்கள் சந்தைக்கு வரும் அபாயம் உள்ளதாக டிஸ்ட்ரிபியூட்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் இதில் அதிகளவு ஏமாற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நுகர்வோர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை மொத்த விற்பனை சந்தை விடுமுறை என்பதால் இன்று முதல் சிகரெட் உற்பத்தியாளர்கள் புதிய MRP விலையில் சந்தையில் சிக்ரெட்களை வர்த்தகத்திற்காக கொண்டு வரும். இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் புதிய விலை அடிப்படையில் சிகரெட் விற்பனைக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். இதுவரையில் பழைய விலை கொண்ட சிகரெட்கள் தான் ரீடைல் கடைகளில் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு புகைப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்தியா புகையிலை வரி விதிப்பை மேம்படுத்தி வருகிறது. சாதாரண மக்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஆனால் நீண்டகாலத்தில் உடல்நலம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு நன்மை தரும் என்று அரசு நம்புகிறது. புகைப்பழக்கத்தை குறைக்க விரும்புவோர் இப்போது சிறந்த நேரம் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications