அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றுகையில், மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது நமது முறை. அந்த மற்ற நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட அதிகமாக வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.
இந்தியா நம்மிடம் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாகன வரியை வசூலிக்கிறது. ஏப்ரல் 2 முதல் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஏற்கனவே அமெரிக்க வரிகளை எதிர்கொண்டுள்ளன. அதேசமயம் இதுவரை டிரம்பின் வரி விதிப்பு இலக்கில் இருந்து இந்தியா தப்பித்தது. ஆனால் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து இந்தியா தப்ப முடியாது.
ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற டிரம்பின் மிரட்டலால், இந்தியாவின் வாகனம் முதல் விவசாயம் வரையிலான ஏற்றுமதி துறைகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 700 கோடி டாலர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிட்டி ரிசர்ச் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 7,400 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு சராசரியாக 11 சதவீதம் வரியை இந்தியா விதித்தது. இது இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்க வரிகளை விட சுமார் 8.2 சதவீதம் அதிகமாகும் என்று சிட்டி மதிப்பீடுகள் காட்டுகின்றன. அமெரிக்கா பரஸ்பர வரிகளை அமல்படுத்தினால், 2026ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 200 கோடி டாலர் சரிவடையும் என்று கடந்த வாரம் இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் தெரிவித்தது.
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பின் தீவிரத்தை உணர்ந்த, இந்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் மார்ச் 8ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த சந்திப்புகளை ரத்து செய்து விட்டு, அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார். அங்கு அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜேமிசன் கிரீனரைச் சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது, இந்தியாவின் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்காக அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தெளிவுப்படுத்த கோயல் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட தொழில்துறை தயாரிப்புகளுக்கான வரிக் குறைப்புகளை பற்றி பேச இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால் விவசாய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதை இந்தியா எதிர்க்கிறது. ஏனென்றால் வரி குறைத்தால் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இதற்கு காரணம்.
வர்த்தக பதற்றத்தை தணிக்க, இந்தியா ஏற்கனவே பல பொருட்களின் மீதான வரிகளை குறைத்துள்ளது. உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும் இந்தியா குறைத்துள்ளது. இதுதவிர,மற்ற வரிகளை பரிசீலனை செய்வதாகவும், எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பதாகவும், மேலும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதாகவும் அமெரிக்காவிடம் இந்தியா உறுதியளித்துள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications