இந்தியாவில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து வெளியேறி வரும் சிட்டிகுரூப் இன்க் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த சிட்டி வங்கி ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய மாநில அரசுகள்
மத்திய மாநில அரசுகள் அனைவருக்கும் கொரோனா வேக்சின் அளித்து வரும் நிலையில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வேக்சின் பெற்றுக்கொள்ளும் முயற்சியாக ஊழியர்களைத் தொடர்ந்து கண்காணிப்புச் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் சிட்டி வங்கி இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சிட்டி குரூப் இன்க்
சிட்டி குரூப் இன்க் அறிவிப்பின் படி ஜனவரி 14ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் வேக்சின் பெற வேண்டும், அப்படி வேக்சின் பெற்றுக்கொள்ளாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிட்டிகுரூப் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்கா
இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிலும் இன்னும் வேக்சின் பெறாத மக்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் கடந்த வருடம் அறிவித்த கொள்கையைத் தற்போது சிட்டிகுரூப் ஜனவரி 14ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் சிட்டிகுரூப் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் ஊழியர்களும் வேக்சின் போட்டுக்கொள்ள விரைந்துள்ளனர்.
கூகுள் அறிவிப்பு
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள்-ம் இதேபோன்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. ஜனவரி 18ஆம் தேதிக்குள் கூகுள் நிறுவனத்தின் வேக்சின் விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாதவர்கள் 30 நாள் paid administrative leave-ல் வைக்கப்படுவார்கள் என்றும், அதைத் தொடர்ந்து 6 மாதம் unpaid personal leave அளிக்கப்படும், இதைத் தொடர்ந்து கட்டாயம் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் இருக்கும் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக அனைத்து ஊழியர்களும் வேக்சின் போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications