இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்த 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி நிறைவடைந்தது. உலக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.
திரும்ப திரும்ப அந்த சோகத்தை சொல்லி, ஏன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிறீங்கன்னு நீங்க நினைக்கிறது தெரியுது. இப்ப இந்திய கிரிக்கெட் டீமை பற்றிய அல்ல உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு நடைபெற்ற நல்ல நிகழ்வு மற்றும் முயற்சி குறித்துதான் சொல்ல போறோம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டியும் தொடங்குவதற்கு முன், போட்டியில் மோதும் இரு நாட்டு வீரர்களும் மைதானத்தில் வரிசையாக நிற்பார்கள், அவர்கள் முன் இரு நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் ஐ.சி.சி.யின் ஒற்றுமை கொடியை சிலர் பிடித்து இருப்பார்கள்.
இரு நாட்டு வீரர்களின் தேசிய கீதம் இசைக்கப்படும். இதை எல்லோரும் பார்த்து இருப்போம். இப்ப விஷயம் அந்த தேசியக் கொடியில்தான் இருக்கு. அந்த தேசியக் கொடியை எந்த மெட்டிரீயலில் தயாரித்து உள்ளார்கள் என்று தெரியுமா?, நீங்கள் நினைப்பது போல் காட்டன் அல்லது பாலிஸ்டர் நூலில் அல்ல. கூல்டிரிங்ஸ், குடிநீரை குடித்து விட்டு நாம தூக்கி எறிவோமே அந்த பெட் பாட்டில் இருந்துதான் தேசியக் கொடியை தயாரித்து இருக்கிறார்கள்.
தூக்கி எறியப்பட்ட பெட் பாட்டில்களை புத்திசாலித்தனமாக நூலாக மாற்றப்பட்டு, பின்னர் அவை திறமையாக கொடிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டின் மீதான பகிரப்பட்ட ஆர்வத்தையும், நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில், கோக கோலா இந்தியா மற்றும் ஐ.சி.சி. ஆகியவை நுகர்வுக்கு பிந்தைய பெட் பாட்டில்களில் இருந்து வடிவமைக்கப்பட்ட தேசியக் கொடிகளை வெளியிட்டன.
இந்த உலகளாவிய விளையாட்டு நிகழ்வை சுற்றுச்சூழல் பொறுப்பை மேம்படுத்துவதற்கான தளமான மாற்றின. பங்கேற்கும் 10 நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் 10 ஐ.சி.சி. ஒற்றுமை கொடிகள் தயாரிக்கும் பணிகள் கோக கோலா இந்தியா நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது.
ஒவ்வொரு தேசியக் கொடியையும் உருவாக்க தோராயமாக 11,000 பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் ஒவ்வொரு ஐ.சி.சி. ஒற்றுமைக் கொடிக்கும் தோராயமாக 2,000 பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மறுசுழற்சி செய்யப்பட்ட நூல் மற்றும் ஆடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற கணேஷா ஈகோவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான GoRevise மூலம் இந்த கொடிகள் தயாரிக்கப்பட்டன. இந்த கொடிகள் தயாரிப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட அர்ப்புணிப்புள்ள தொழிலாளர்கள், 25 நாட்கள் அயராது உழைத்து இந்த கொடிகளை உருவாக்கியுள்ளனர்.
கோக கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் சந்தைப்படுத்துதல் துணைத் தலைவர் அர்னாப் ராய் கூறுகையில், எல்லா விளையாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிலைத்தன்மை முயற்சிகளை ஆதரிக்கும் நோக்கத்தை கோக கோலா கொண்டுள்ளது.
இந்த பணியுடன் இணைந்து, இன்று ஐ.சி.சி. ஆண்கள் உலகக் கோப்பை 2023ல் மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் மூலம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட தேசிய மற்றும் ஐ.சி.சி. ஒற்றுமை கொடிகள் மூலம் வட்ட பொருளாதார கொள்கைகளை முன்னேற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications