கிலோ கணக்கில் தங்க நகை விற்கும் பெற்றோர்கள்.. கோயம்புத்தூரில் நடப்பது என்ன? +2 ரிசல்ட் எதிரொலி..!!

பொதுவாக தங்கம் விலை உயர்ந்தால் சோகத்தில் மூழ்கும் மக்கள், +2 ரிசல்ட் வந்த நாளில் இருந்து தங்கம் விலை உயர்வு குறித்து ஒரு தரப்பினர் மட்டும் மிகழ்ச்சியாக உள்ளனர். யார் அவர்கள்..?

இந்திய பெற்றோர்கள் காலம் காலமாக தங்கத்தின் மீது முதலீடு செய்து முக்கிய செலவுகள் வரும் போது, தங்க நகைகளை விற்பனை செய்தோ அல்லது அடகு வைத்தோ நிதி திரட்டுவது வழக்கம். இந்த நிலையில் +2 ரிசல்ட் வந்த பின்பு மகன் அல்லது மகளை கல்லூரியில் சேர்க்க ரெடியாக இருக்கும் பெற்றோர்கள் தங்கம் விலை உயர்வால் மகிழ்ச்சி உடன் உள்ளனர்.

கிலோ கணக்கில் தங்க நகை விற்கும் பெற்றோர்கள்.. கோயம்புத்தூரில் நடப்பது என்ன? +2 ரிசல்ட் எதிரொலி..!!

தங்கம் விலை உயர்ந்துள்ள காரணத்தால், கல்லூரியில் தங்களது குழந்தைகளை சேர்க்க தயாராக இருக்கும் பெற்றோர்கள், தங்களுடைய சிறிய சிறிய சேமிப்பில் பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த தங்க நகையை விற்பனை செய்யும் போதோ அல்லது அடகு வைக்கும் போது கூடுதல் பணம் கிடைக்கும். இது குழந்தைகளை கல்லூரியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு பெரிய அளவில் உதவும்.

இதை உண்மையாகும் வகையில் தமிழ்நாட்டில் தங்க நகை விற்பனைக்கும், தயாரிப்புக்கும், ஏற்றுமதிக்கும் பெயர் போன கோயம்புத்தூர் மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியான பின்பு ஒரு நாளுக்கு 10 முதல் 12 கிலோ அளவிலான பழைய தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு பணமாக மாற்றப்படுகிறதாம்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோயம்புத்தூரில் மட்டும் பழைய நகை விற்பனை செய்தது மூலம் 6 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடந்திருப்பதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் முக்கிய மற்றும் அதிக கல்லூரிகள் இருப்பதும் கோயம்புத்தூர் மாவட்டம் தான்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கும் காரணத்தாலும், படிப்பு வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என உறுதியாக நம்பப்படும் காரணத்தால், பெற்றோர்கல் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை படிப்புகாக செலவு செய்கின்றனர்.

இதேவேளையில் தமிழ்நாட்டில் கல்விக்கான கட்டணமும், செலவுகள் அதிகரித்துள்ளது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதையும் மறக்க முடியாது. இது பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரையில் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது, இதுமட்டுமா கல்லூரிகளில் கல்வியின் தரம் குறித்தும் அவ்வபோது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் சரிந்து 56100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் சரிந்து 61200 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 44,880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 100 ரூபாய் குறைந்து 74,500 ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+