நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் புதிய மாற்றங்கள் உணவு துறை வர்த்தகத்தில் மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்க உள்ளன. குறிப்பாக, கிரீம் பன் போன்ற பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கிரீம் பன் விவகாரம் கடந்த ஆண்டு பெரிய சர்ச்சையாக வெடித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கிரீம் பன் உட்பட அனைத்து ஸ்னாக்ஸ் வகைகளுக்கும் பெரிய அளவிலான நிவாரணத்தை கொடுத்துள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம் உணவு தொழில் துறையில் ஏற்பட்டிருந்த வரி விகித பிரச்சனைகளை சரி செய்வது மட்டும் அல்லாமல் அதன் விலை குறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

கோயம்புத்தூர் அன்னபூர்ணா கிரீம் பன் விவகாரம்
கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக கூட்டமைப்புடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசணை நடத்தினார். அப்போது கோயம்புத்தூரில் அடையாளமாக விளங்கும் அன்னபூர்னா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசினார்.
நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் தொழிற்துறையினர் முன்னிலையில் பேசி சீனிவாசன் உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு மாறுப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை உள்ளது. இதனால் எங்கள் ஹோட்டலுக்கு குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் வாங்கும் போது ஏன் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு வரி போடுறீங்க என சண்டை போடுகிறார்கள். இதேபோல் பில்
அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி இருக்கு, சமாளிக்க முடியல என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த வீடியோ காட்டுத்தீ போல பரவிய நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசினார், அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவும் அப்போது வெளியானது. இதற்கு மக்கள் நிர்மலா சீதாராமன் மீது கடுமையான விமர்சனம் செய்தனர்.
கிரீம் பன்-க்கு தீர்வு
கடந்த ஆண்டு நடந்த பிரச்சனையை தொடர்ந்து நேற்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் கிரீம் பன் போன்ற பொருட்கள் இதுவரை பேஸ்ட்ரிகள் பிரிவின் கீழ் 18 சதவீத வரியில் இருந்த நிலையில் இது மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றம் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். தற்போதைய ஜிஎஸ்டி நடைமுறையில் தனியாக பன் மற்றும் கிரீம் வாங்கினால் அவற்றுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.
புதிய ஜிஎஸ்டி மாற்றங்களின் கீழ், பேஸ்ட்ரிகள் பிரிவு 5 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் கிரீம், பன் மற்றும் கிரீம் பன் ஆகியவை ஒரே 5 சதவீத வரி விகிதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இது உணவு துறையினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது, குறிப்பாக கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டலுக்கு பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மற்றொரு பகுதியாக, நம்கீன், புஜியா, மிக்சர், சபீனா போன்ற ஸ்னாக்ஸ் பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த 18 சதவீத இலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல், சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்படாத குடிநீர் மற்றும் ஏரேட்டெட் வாட்டர் ஆகியவை 18 சதவீத இலிருந்து 5 சதவீதமாக மாறியுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications