கோயம்புத்தூர் மக்களை குஷிப்படுத்தும் விதமாக மகிழ்ச்சியான ஒரு செய்தி வந்துள்ளது. கோவை நகரத்தை மையமாக வைத்து ஐடி முதல் உற்பத்தி துறையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வரும் வேளையில், தற்போது மொத்த ரியல் எஸ்டேட் துறை பொழுதுபோக்கு பக்கம் திரும்பியுள்ளது.
கோவை நகரின் பொழுதுபோக்கு சேவைகளை மேலும் சிறப்பிக்க, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்றாவது மல்டி ஸ்கிரீன் சினிமா தியேட்டர் விரைவில் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே கோவை மக்களுக்கு பிராட்வே சினிமாஸ் மூலம் பெரும் பகுதி மக்களை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான PVR, இந்த புதிய மல்டி ஸ்கிரீன் திரையரங்கத்தை "PVR - a PVR Inox Experience" என்ற பெயரில் கொண்டு வருகிறது.

மொத்தம் ஐந்து திரைகளைக் கொண்ட இந்த மல்டி ஸ்கிரீன் சினிமா தியேட்டர், சமீப காலத்தின் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.

புதிதாக திறக்கப்பட உள்ள PVR - a PVR Inox Experience மல்டி ஸ்கிரீன் சினிமா தியேட்டர், வடவள்ளி பகுதியில் உள்ள அல்வீல் ஃபன் சாவி மாலில் வர உள்ளது. இந்த மால் P.N. புதூர் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அதிநவீன மல்டி ஸ்கிரீன் சினிமா தியேட்டர் விரைவில் திறக்கப்படவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மால் மற்றும் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications