இந்தியாவின் மிகப் பெரிய எஃப் எம் சி ஜி கம்பெனிகளில் ஒன்றான கோல்கேட் பாமாலிவ் (Colgate Palmolive) கம்பெனியின் செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது. கோல்கேட் பாமாலிவ் கம்பெனி, இந்தியாவில் பற்பசை மற்றும் சோப்புப் பொருட்களில் தான் அதிகம் வியாபாரம் செய்து வருகிறது.

கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டான செப்டம்பர் 2019 காலாண்டில் , கோல்கேட் பாமாலிவ் (Colgate Palmolive) கம்பெனியின் கன்சாலிடேடட் நிகர லாபம் (Consolidated Net profit) 244 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த 2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (செப்டம்பர் 2020) கன்சாலிடேடட் நிகர லாபம் 274 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கன்சாலிடேடட் நிகர லாபம் 12.3 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
கோல்கேட் பாமாலிவ் (Colgate Palmolive) கம்பெனியின் வருவாய் இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 1,286 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 1,222 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருந்தது. ஆக வருவாயும் 5.2 சதவிகித அதிகரித்து இருக்கிறது.
எபிட்டா (EBITDA - Earnings before interest, tax, depreciation and amortisation) இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 409 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019-ல் எபிட்டா 323 கோடி ரூபாயாக இருந்ததாம். ஆக கடந்த ஆண்டை விட, இந்த 2020-ம் ஆண்டில் 26.7 சதவிகிதம் எபிட்டா அதிகரித்து இருக்கிறது.
காலாண்டு முடிவுகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம், கோல்கேட் பாமாலிவ் (Colgate Palmolive) கம்பெனியின் இயக்குநர் குழு, ஒரு பங்குக்கு 18 ரூபாய் என முதல் இடை கால ஈவுத் தொகையை அறிவித்து இருக்கிறது.
செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் வெளியான பிறகும் கோல்கேட் பாமாலிவ் (Colgate Palmolive) கம்பெனி விலை பெரிய ஏற்றம் காணவில்லை. கோல்கேட் பங்கு விலை 0.50 % விலை ஏற்றம் கண்டு, 1,434 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications