எல்லாருமே முதலீடு செய்த பணம் குறுகிய காலத்தில் பெருக வேண்டும் என்று விரும்புவார்கள் அந்த வகையில் கூட்டு வட்டி வரும் முதலீட்டு திட்டங்கள் உங்கள் பணத்தின் மதிப்பை வேகமாக அதிகரிக்கும். கூட்டு வட்டி சில நேரங்களில் வட்டிக்கு வட்டி என அழைக்கப்படுகிறது.
அசல் தொகை மற்றும் முந்தைய காலங்களில் திரட்டப்பட்ட வட்டி இரண்டிலும் வட்டி கணக்கப்படுகிறது. முறையான முதலீட்டு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால், சில வருடங்களில் அது உங்களை கோடீஸ்வரராக்கும். சில கூட்டு வட்டி அளிக்கும் முதலீட்டு திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பிக்சட் டெபாசிட்: நிரந்தர வைப்பு அல்லது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பணத்துக்கு வட்டியுடன் கிடைக்கும். வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது இந்தியாவின் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உங்களுக்கு வருமான வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
வருங்கால வைப்பு நிதி: நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) சிறந்த தேர்வாக இருக்கும். இது உங்களுக்கு கூட்டு வட்டி பலன்களையும் வழங்குகிறது. மேலும் இது மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் சிறந்தது. தற்போது பி.எஃப். 8.15 சதவீத வட்டியை வழங்குகிறது.
பொது வருங்கால வைப்புநிதி: எந்தவொரு இந்திய குடிமகனும் பொது வருங்கால வைப்புநிதியில் (பி.பி.எஃப்.) முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் கூட்டு வட்டியின் பலன்களை பெறலாம். ஒருவர் 15 ஆண்டுகள் பி.பி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் வரி இல்லாமல் பணத்தை பெறலாம்.
முறையான முதலீட்டு திட்டம்: இன்றைய காலத்தில் எஸ்.ஐ.பி. அல்லது முறையான முதலீட்டு திட்டம் ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாக பார்க்கப்படுகிறது. தவணைகளில் முதலீடு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். எஸ்.ஐ.பி. மீதான கூடுதல் வட்டி முதலீட்டின் கால அளவை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எஸ்.ஐ.பி.யின் லாபம் பங்குச் சந்தை செயல்திறனை பொறுத்தது என்றாலும், இது உங்களுக்கு ஆண்டுக்கு 12 முதல் 15 சதவீதம் வரை வருமானம் கிடைக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
பரஸ்பர நிதி திட்டங்களில் எஸ்.பி.ஐ. மூலம் மேற்கொள்ளும் முதலீடு உங்களுக்கு நிலையான வளர்ச்சியையும் கூட்டு வட்டியையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உங்கள் வருமானத்தை வேகமாக வளர்க்க உதவும். மாதம் ரூ.20,000 வீதம் ஆண்டுக்கு ரூ.2,40,000 முதலீடு செய்து ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி கண்டால், 15 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். அந்த கால கட்டத்தில் நீங்கள் ரூ.64.9 லட்சத்தை மூலதன ஆதாயமாக பெறுவீர்கள். முதலீட்டுக்கும் மூலதன ஆதாயத்துக்கும் உள்ள வேறுபாடு கூட்டு வருமானத்தின் சக்தியை காட்டுகிறது. உங்கள் முதலீட்டை விட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications