நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்தால் நாமே சொந்தமாக பெரிய செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை பறிமுதல் செய்த பங்குகள் குறித்த தகவல்களை குறிப்பிட்டு சிஎஃப்பி மற்றும் அமெச்சூர் முதலீட்டாளருமான டி முத்து கிருஷ்ணன் எளிமையாக தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் , எதிரி சொத்துக்களின் பாதுகாவலர் அலுவலகம் என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. 1965 மற்றும் 1971 போருக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டவர்களின் பங்கு சான்றிதழ்களை இந்த அலுலவகம் பறிமுதல் செய்தது. 1968ம் ஆண்டின் முதல் எதிரி சொத்து சட்டத்தின்படி இந்த அலுவலகம் செயல்படுகிறது.

1971ல் இந்த பறிமுதல் செய்யப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ.29.4 கோடியாக இருந்தது. இவை பறிமுதல் செய்யப்பட்ட பங்குகள் மட்டுமே. இது நன்கு சிந்தித்து முதலீடு செய்து கட்டமைக்கப்பட்ட போர்ட்போலியா அல்ல.
கடந்த 44 ஆண்டுகளாக இவை அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே அழிந்து போன நிறுவனங்கள், முதலீட்டாளர் பணத்தை திருடிய மோசடி நிறுவனங்கள், செயல் திறன் குறைந்த நிறுவனங்கள் போன்றவற்றின் பங்குகளும் இதில் இருக்கும்.
சென்செக்ஸ் அல்லது மியூச்சுவல் பண்ட் போன்றது அல்ல இந்த பறிமுதல் செய்யப்பட்ட பங்கு போர்ட்போலியோ. அவை அவ்வப்போது மாற்றப்பட்டு தீவிரமாக நிர்வகிக்கப்படுகின்றன. இந்த பங்குகள் பிசிக்கல் வடிவத்தில் உள்ளது. தற்போது மத்திய அரசு இதை டீமேட் செய்ய விரும்புகிறது.
இந்த பங்குகளின் தற்போதை மதிப்பு ரூ.10,000 கோடியாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு டிவிடெண்டாக பெறப்பட்ட ரூ.40 கோடி சேர்க்கப்படவில்லை. கடந்த 44 ஆண்டுகளாக இந்த பங்குகள் ஆண்டுக்கு 14 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதாயம் அளித்து வருகின்றன.
இந்த போர்ட்போலியோ கடந்த 44 ஆண்டுகளாக டிவிடெண்ட் வடிவில் வழக்கமான வருமானத்தை ஈட்டி வருகிறது. மேலும் டிவிடெண்ட் தொகையும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப மூலதன தொகையை (பறிமுதல் செய்யப்பட்ட பங்குகளின் மதிப்பு) காட்டிலும் இப்போது ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை அதிகம். டிவிடெண்ட் ஆதாயத்தையும் சேர்ந்திருந்தால், வருமானம் சில சதவீத புள்ளிகள் அதிகமாக இருந்திருக்கும்.
இன்டெக்ஸ் அல்லது ஈக்விட்டி பண்டுகளில் உங்கள் முதலீடுகளை தொடாமல் விட்டுவிட்டால் அடுத்த இரண்டு தசாப்தங்களில் உங்களால் எவ்வளவு செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு மாதமும் முடிந்த தொகையை நீங்கள் தொடர்ந்து பங்களித்தால் (பங்குகளில் முதலீடு செய்தால்) நீங்கள் உங்கள் சொந்த செல்வத்தை உருவாக்க முடியும். கடந்த கால வருமானத்தை எதிர்காலத்தில் பெற வேண்டியதில்லை.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மற்றும் கார்ப்பரேட் இந்தியாவின் வளர்ச்சி பாதையை கருத்தில் கொண்டு நல்ல பணவீக்கத்தை முறியடிக்கும் வருமானம் சாத்தியம். உறுதியையும், பொறுமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யுங்கள். கூட்டு வருமானம் மற்றும் நேரத்தின் பலன்களை பெறுங்கள்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications