காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை ஏப்ரல் 5-ஆம் தேதி (இன்று) வெளியிட்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியீட்டின் போது உடனிருந்தனர்.
இம்முறை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 'நியா பத்ரா' என்ற அடை மொழியுடன் வந்தது "நியா" என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது நீதி, அனைவருக்கும் சமத்துவம் என்ற பொருள் உடையது. "பத்ரா" என்பது ஒரு பெயர்ச்சொல், அதாவது ஒரு நபர் அல்லது அமைப்பைக் குறிக்கும் சொல். அனைவருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி, சமத்துவம் என்பதைதான் குறிக்கிறது.

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட முக்கியமாக ஜிஎஸ்டி குறித்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை வர்த்தக சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில், பிஜேபி / என்டிஏ அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டங்களை ஜிஎஸ்டி 2.0 உடன் காங்கிரஸ் மாற்றும்.
காங்கிரஸ் அமலாக்கம் செய்யப்பட்டும் புதிய ஜிஎஸ்டி முறையில், ஜிஎஸ்டி என்பது ஏழைகளுக்குச் சுமையை ஏற்படுத்தாத ஒன்றாக இருக்கும், மிதமான வட்டி விகிதம் (சில விதிவிலக்குகளுடன்) அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கையின் அடிப்படையில் அமையும். விவசாயத்துறை உள்ளீடுகள் ஜிஎஸ்டி விதிக்கப்படாது அதாவது agricultural inputs-க்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விவசாய உள்ளீடுகள் என்பது விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மின்சாரம், கால்நடை மருந்துகள், உபகரணங்கள், கால்நடை தீவனம் மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் போன்ற பண்ணை பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வளங்கள் ஆகும்.
ஜிஎஸ்டி சட்டங்களின் நிர்வாகம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சரி சமமாக பிரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே உள்ள சிறிய ஜிஎஸ்டி செலுத்துபவர்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்கு வருவார்கள்.
ஜிஎஸ்டி வருவாயில் ஒரு பகுதி பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் கடைக்காரர்கள் மற்றும் சிறு சில்லறை வணிகங்களுக்குக் குறிப்பிடத்தக்க வரி விலக்கு அளிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலம் முழுவதும் நிலையான தனிநபர் வருமான வரி விகிதங்களை நடைமுறையில் வைத்திருக்கும், ஒவ்வொரு வருடமும் மாற்றங்களைச் செய்யாது. இதன் மூலம் மாத சம்பளம் பெறும் மக்கள் உயரும் வரி விகிதங்களின் குழப்பத்தில் சிக்காமல் மீடியோம் முதல் லாங்க டர்ம் முறையில் அவர்களின் நிதிநிலையைத் தெளிவாகத் திட்டமிட உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications