6.09 சதவிகிதத்தில் நுகர்வோர் பணவீக்கம்!

டெல்லி: ஜூன் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation) அனைத்து இந்திய சராசரி கணக்கு தரவுகளை இன்று ஜூலை 13, 2019 மாலை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation) வெளியிட்டு இருக்கிறது. முதலில் நாம் அனைத்து இந்திய சராசரி கணக்குகளைப் பார்ப்போம்.

6.09 சதவிகிதத்தில் நுகர்வோர் பணவீக்கம்!

பணவீக்கம்

ஜூன் 2020-க்கான நுகர்வோர் பணவீக்கம் 6.09 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவின் கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index) 6.20 %-மாக இருக்கிறது. அதே போல இந்தியாவின் நகர் புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 5.91 %-மாக இருக்கிறது.

உணவுப் பணவீக்கம் ஜூன் 2020

ஜூன் 2020-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 7.87 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவின் கிராம புறங்களில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் (Consumer Food Price Index) 8.41 %-மாக இருக்கிறது. அதே போல இந்தியாவின் நகர் புறங்களில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 6.92 %-மாக இருக்கிறது.

உணவுப் பணவீக்கம் மே 2020

கடந்த மே 2020 மாதத்தில் ஒட்டு மொத்த இந்தியாவின் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 9.20 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவின் கிராம புறங்களில் மே 2020-ல் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் (Consumer Food Price Index) 9.68 %-மாக இருந்தது. அதே போல இந்தியாவின் நகர் புறங்களில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் மே 2020-ல் 8.29 %-மாக இருந்தது.

அனைத்து இந்திய மாநிலங்களின் சராசரியாக அடிப்படை பொருட்களின் விலைவாசி மாற்றம் ஜூன் 2020-க்கு மத்திய அரசு கணித்துக் கொடுத்து இருக்கிறது. அவைகளின் பட்டியலைக் கீழே காணலாம்.

விலை வாசிப் பட்டியல்

  • தானியங்கள் 6.49 %
  • மீன் இறைச்சி 16.22 %
  • முட்டை 7.40 %
  • பால் 8.44 %
  • எண்ணெய் & கொழுப்புகள் 12.27 %
  • பழங்கள் -0.68 %
  • காய்கறிகள் 1.86 %
  • பருப்பு வகைகள் 16.68 %
  • சர்க்கரை 4.41 %
  • மசாலா பொருட்கள் 11.74 %
  • எரிபொருள் 2.69 %
  • புகையிலைப் பொருட்கள் 9.70 % என அதிகரித்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+