Consumer Price Index செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம்!

டெல்லி: செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index - CPI) அனைத்து இந்திய சராசரி கணக்குகள் இன்று அக்டோபர் 12, 2020 மாலை வெளியாகி இருக்கிறது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Program Implementation) இந்த தரவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இனி நாம் பார்க்கப் போவது எல்லாமே அனைத்து இந்திய சராசரிகள் தான். தனியாக தமிழகத்தின் பணவீக்கக் கணக்குகளைப் பார்ப்போம்.

சிபிஐ பணவீக்க விவரம்

சிபிஐ பணவீக்க விவரம்

செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index) 7.34 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2020-ல் நுகர்வோர் பணவீக்கம் 6.69 சதவிகிதமாக இருந்து இருக்கிறது. செப்டம்பர் 2020-ல், இந்தியாவின் நகர் புறங்களில் பணவீக்கம் 7.26 சதவிகிதமாகவும், கிராம புறங்களில் 7.43 சதவிகிதமாகவும் இருக்கிறதாம்.

 CFPI - உணவுப் பணவீக்கம்

CFPI - உணவுப் பணவீக்கம்

செப்டம்பர் 2020-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் (Consumer Food Price Index) 10.68 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 9.05 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவின் நகர் புறங்களில் செப்டம்பர் மாதத்துக்கான உணவுப் பணவீக்கம் 10.94 சதவிகிதமாகவும், கிராம புறங்களில் 10.60 சதவிகிதமாகவும் இருக்கிறதாம்.

செப்டம்பர் விலை வாசி விவரம்

செப்டம்பர் விலை வாசி விவரம்

  • தானியங்கள் 4.68 %
  • மீன் இறைச்சி 17.60 %
  • முட்டை 15.47 %
  • பால் 5.64 %
  • எண்ணெய் & கொழுப்புகள் 13.44 %
  • பழங்கள் 3.21 %
  • காய்கறிகள் 20.73 %
  • பருப்பு வகைகள் 14.67 %
  • சர்க்கரை 2.47 %
  • மசாலா பொருட்கள் 11.73 %
  • எரிபொருள் 2.87 % என விலைவாசி அதிகரித்து இருக்கிறதாம். மேலே சொன்னது, அனைத்து இந்திய மாநிலங்களுக்கான சராசரி விவரங்கள் மற்றும் விலைவாசி விவரங்கள்.
தமிழகத்துக்கான சிபிஐ பணவீக்கம்

தமிழகத்துக்கான சிபிஐ பணவீக்கம்

தமிழகத்தில் செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கமும் (CPI Inflation) இந்த அறிக்கையிலேயே வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்துக்கு மட்டும் எனப் பார்த்தால் செப்டம்பர் 2020-க்கான நுகர்வோர் பணவீக்கம் 7.78 சதவிகிதமாக இருக்கிறது. அனைத்து இந்திய சராசரியான 7.34 சதவிகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான்.

தமிழகத்தில் கிராமம் Vs நகரம்

தமிழகத்தில் கிராமம் Vs நகரம்

தமிழகத்தின் நகர் புறத்தில் நுகர்வோர் பணவீக்கம் 8.15 சதவிகிதமாகவும், தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 7.27 சதவிகிதமாகவும் இருக்கிறது. இது செப்டம்பர் 2019 உடனான ஒப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து இந்திய சராசரியில், கிராம புறங்களில் தான் பணவீக்கம் அதிகம். ஆனால் தமிழகத்தில் நகர்புறத்தில் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+