தங்கத்தை விட அதிக லாபம்.. காப்பர் விலையை பாருங்க.. டிரம்ப்-ன் மிரட்டலால் அதிரடி உயர்வு!

டாலர் மதிப்பில் தடுமாற்றம், குறையாத கச்சா எண்ணெய் விலை, மந்த நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதார வளர்ச்சி என ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் இக்காட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருக்கும் போது உலோக சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்திலும், வெள்ளியிலும் முட்டி மோதிக்கொண்டு இருக்கும் வேளையில் வெகு சில முதலீட்டாளர்கள் காப்பர் மீதான முதலீட்டில் பெரும் லாபத்தை பதிவு செய்துள்ளனர்.

லண்டன் உலோக வர்த்தக சந்தையில் ஒரு டன் காப்பர் விலை 14,533 டாலர் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு முதலீட்டு சந்தையில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கத்தை விட அதிக லாபம்.. காப்பர் விலையை பாருங்க.. டிரம்ப்-ன் மிரட்டலால் அதிரடி உயர்வு!

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2026ஆம் ஆண்டில் தங்கம் விலை வெறுமென 2.30 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கும் வேளையில், காப்பர் விலை 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த 12 மாதத்தில் 47 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் கொடுத்துள்ளது.

எப்படி ஈரான் போருக்கு முன்பு தங்கத்தை காட்டிலும் வெள்ளி மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்து 4 லட்சம் ரூபாய் அளவீட்டை தொட்டதோ, அதேபோல் தற்போது காப்பர் முக்கிய இடத்தை படித்திருக்கிறது.

தொழிற்துறையில் முக்கிய உலோகமாக இருக்கும் காப்பர், திடீரென உயர முக்கியமான காரணம் டிரம்ப். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்பர் மீது டிரம்ப் வரி விதிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Also Read

இதனால் அமெரிக்காவில் பெரும்பாலான வர்த்தகர்கள் வரி விதிக்கும் முன்பு தேவையான இருப்பை உருவாக்கும் பொருட்டு அதிகப்படியான உலோகத்தை வாங்கி குவித்தனர், இதன் எதிரொலியாக சுமார் 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 8,85,000 டன் காப்பர் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த திடீர் தேவையின் காரணமாக காப்பர் விலை கண்மூடித்தனமாக உயர துவங்கியுள்ளது, இதேவேளையில் அமெரிக்காவின் காமெக்ஸ் கிடங்குகளில் காப்பர் இருப்பு 6,75,000 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாகவே லண்டன் உலோக சந்தையில் காப்பர் விலை 14,533 டாலர் வரையில் உயர்ந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.

Recommended For You

வர்த்தகத்தை தாண்டி காப்பருக்கான டிமாண்டும் தற்போது பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் ஏஐ மற்றும் டேட்டா சென்டர் விரிவாக்கம் தான்.

டேட்டா சென்டர் துறையில் பவர் சிஸ்டம்ஸ், கூலிங் இன்பரா, நெட்வொர்க் பிரிவில் என பல காப்பருக்கான பயன்பாடு அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் வாகன உற்பத்தி அதிகரித்துள்ளதால் இத்துறையிலும் காப்பருக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதனால் காப்பர் உலோகத்தின் சப்ளையை உறுதி செய்ய பெரும் போராட்டம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+