இந்திய பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் சந்தை குறித்து ஆய்வு செய்யும் CMIE அமைப்பு செய்த ஆய்வில், இந்தியா வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் ஈடுபாடு 4 வருடத்தில் மோசமான நிலையை இந்த ஆண்டு அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதன் படி வேலைவாய்ப்பில் பெண்களின் ஈடுபாட்டு அளவு (LFPR) வெறும் 11 சதவீதமாக உள்ளது என்றும் ஆண்களின் வேலைவாய்ப்பு சந்தை ஈடுபாட்டு அளவு 71 சதவீதமாக உள்ளது என CMIE அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
கொரோனா லாக்டவுன் பாதிப்பு
2019-2020ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மக்கள் தொகையில் பெண்களின் அளவீடு 10.7 சதவீதமாக இருந்தது. தற்போது கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் நிறுவனங்கள் செய்த பணிநீக்கத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சுமார் 13.9 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
2016 முதல் பெண்கள் பாதிப்பு
CMIE அமைப்பின் தகவல்கள் படி 20களில் இருக்கும் பெண்கள் வேலைக்குச் செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை 2005 முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 5 வருடத்தில் 2016 பணமதிப்பிழப்பு, 2020ல் கொரோனா பாதிப்பு மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
LFPR அளவீடு
LFPR அளவீடு என்பது 15 வயதுக்கு மேல் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வேலைக்குச் செல்ல விரும்புவோரின் அளவீடு. இந்த ஆய்வில் வேலையில் இருப்பவர்களும், வேலையில் இல்லாதவர்களும் இடம்பெறுவார்கள் என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது
இதன் படி பெண்களின் LFPR அளவு 11 சதவீதமாகவும், ஆண்களின் LFPR அளவு 71 சதவீதமாக உள்ளது.
பெண்கள் Vs ஆண்கள்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் மார்ச் முதல் ஜூன் வரையில் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் தான் LFPR அளவீட்டில் பெண்கள், ஆண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வித்தியாசத்திற்குக் காரணம். குறிப்பாக நகரத்துப் பெண்கள் மத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என CMIE அமைப்பின் நிர்வாகத் தலைவர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.
நகரம் Vs கிராமம்
2019-2020 நிதியாண்டில் கிராமத்தின் பெண்கள் மத்தியில் வேலைக்குச் செல்லும் ஆர்வம் அதிகமாகவும், அதிகக் கல்வி, வாய்ப்புகள் கிடைக்கும் நகரத்துப் பெண்கள் மத்தியில் வேலைக்குச் செல்ல ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளதை CMIE அமைப்பு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
2019-2020 நிதியாண்டில் கிராமத்தின் பெண்களின் LEPR அளவீடு 11.3 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் நகரத்துப் பெண்களின் LEPR அளவீடு 9.7 சதவீதமாக இருந்துள்ளது.
5 வருடத்தில் ஏற்பட்ட மாற்றம்
2016 பணமதிப்பிழப்புக்கு முன்பு 18 சதவீதமாக இருந்த பெண்களின் LEPR அளவீடு ஒரு வருடத்திற்குப் பின் 10 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2019ல் இதன் அளவீடு 14.3 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில் 2020 கொரோனா பாதிப்பு மூலம் 8.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications