இந்தியாவின் முதல் கொரோனா தொற்று அலையின் போது எவ்விதமான முன்னேற்பாடும் இல்லாமல் எதிர்வினைகளை யோசிக்காமல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவுகளில் வங்கி மிகவும் முக்கியமானது, வங்கிகள் இன்றைய நாள் வரையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வங்கிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான்
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் வங்கிகளின் நிதி மதிப்பீட்டுக்கு மீண்டும் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது. கொரோனா அலை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது உருவாகியிருக்கும் 3வது கொரோனா அலையில் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு
இந்திய வங்கிகள் கடன் மறுசீரமைப்புச் செய்ய விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. கொரோனா-வை போல் ஒமிக்ரான் வைரஸ் உயிர் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கணிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் மற்றும் வர்த்தக நேர கட்டுப்பாடுகள் வங்கிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது அலை
இதேவேளையில் 3வது அலையில் மோடோரோரியம் அதாவது கடன் சலுகை கொடுக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. இது 2வது அலையின் போது வங்கிகள் எடுத்த முடிவின் மூலம் உறுதியாகியுள்ளது.
முதல் கொரோனா தொற்று அலை
முதல் கொரோனா தொற்று அலையின் போது வர்த்தகம் மற்றும் வருமானத்தை இழந்த பல லட்சம் நிறுவனங்கள் கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. இதனால் வங்கிகளில் வாராக் கடன் அளவு அதிகரித்து வங்கியின் நிதிநிலை மிகவும் மோசமானது.
கடன் சலுகை
இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களுக்கு மோரோடோரியம் அதாவது கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் 6 மாதம் சலுகை அளித்தது.
இந்த மோரோடோரியம் மூலம் வங்கிகளுக்கு 6 மாத வட்டி வருமானமும் இழந்தது.
2வது கொரோனா அலை
2வது கொரோனா அலையில் மோரோடோரியம் போன்றவற்றை அளிக்காமல் கடன் மறுசீரமைப்பு, கடனை செலுத்த முடியாத வர்த்தகக் கடன் கணக்குகளுக்குக் கூடுதலான கடனை கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது போன்ற நடவடிக்கையை எடுத்தது.
இதில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச் சிறு நிறுவனங்களை விடவும் பெரு நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications