இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்றுக் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், தினமும் பல நூறு பேர் உயிரிழந்து வரும் நிலையில் பல லட்சம் பேர் கொரோனா தொற்று உள்ள போதிலும் முறையாகச் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் மருந்து சிகிச்சைக்காகவும், இதர செலவுகளுக்காகவும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வங்கி மற்றும் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தின் அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள்
கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு போடப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
முழு ஊரடங்கு
இதற்கு ஏற்றார் போல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமலாக்கம் செய்துள்ளது. மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தின் காரணமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் மக்கள் கையில் அதிகளவில் வந்துள்ளது.
ஒரே வாரத்தில் 30,191 கோடி ரூபாய்
ஏப்ரல் 9ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் மட்டும், மக்கள் கைகளில் வந்துள்ள பணம் 30,191 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கையில் இருக்கும் மொத்த பணத்தில் மதிப்பு 27,87,941 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
6 வாரத்தில் 52,928 கோடி ரூபாய்
இதேபோல் பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 9 வரையிலான 6 வார காலகட்டத்தில் மக்கள் கையில் வந்துள்ள பணத்தின் அளவு 52,928 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது.
2020 லாக்டவுன்
இதேபோல் கடந்த ஆண்டு நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்ட மார்ச் முதல் ஜூன் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மக்கள் கைகளில் வந்துள்ள பணத்தின் அளவு 3.07 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பணப் புழக்கத்தின் அளவு 22.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 25.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. கிட்டத்தட்ட இதே நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.
பணத்தை வித்டிரா செய்யும் மக்கள்
இந்த நிலை குறித்து வங்கி அதிகாரிகள் சில கூறுகையில், மக்கள் கடந்த சில வாரங்களாக வங்கிகளில் இருந்து அதிகளவிலான பணத்தை வித்டிரா செய்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் லாக்டவுன் விதிக்கப்பட்டால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் கையில் வேண்டும் என்பதற்காக அதிகப் பணத்தை வித்டிரா செய்கின்றனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய 1000 மற்றும் 500 ரூபாயைத் தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமலாக்கம் செய்ததே இந்தியாவைப் பணமில்லா பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இன்று மக்கள் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மீது நம்பிக்கை இல்லாமல் பணத்தைக் கையில் எடுத்து வருகின்றனர்.
பணமில்லா பொருளாதார - பணம் தான் ராஜா
மத்திய அரசு இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்தப் பல சேவைகளை அறிமுகம் செய்த நிலையிலும் மக்களின் நம்பிக்கை பெற முடியவில்லை என்பதற்கு இதுதான் முக்கியக் காரணமாக உள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் பணம் தான் ராஜா என 2020க்குப் பின் மீண்டும் புரிய வைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications