டெல்லி: ஜூலை 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation) அனைத்து இந்திய சராசரி கணக்குகள் இன்று ஆகஸ்ட் 13, 2020 மாலை வெளியாகி இருக்கிறது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Program Implementation) வெளியிட்டு இருக்கிறது.
இனி நாம் பார்க்கப் போவது எல்லாமே அனைத்து இந்திய சராசரிகள் தான். தனியாக தமிழகத்தின் பணவீக்கக் கணக்குகளைப் பார்ப்போம்.
பணவீக்கம்
ஜூலை 2020-க்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index) 6.93 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2020-ல் நுகர்வோர் பணவீக்கம் 6.23 சதவிகிதமாக இருந்து இருக்கிறது. ஜூலை 2020-ல், இந்தியாவின் நகர் புறங்களில் பணவீக்கம் 6.84 சதவிகிதமாகவும், கிராம புறங்களில் 7.04 சதவிகிதமாகவும் இருக்கிறதாம்.
உணவுப் பணவீக்கம்
ஜூலை 2020-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் (Consumer Food Price Index) 9.62 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. ஜூன் 2020 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 8.72 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவின் நகர் புறங்களில் உணவுப் பணவீக்கம் 9.05 சதவிகிதமாகவும், கிராம புறங்களில் 9.89 சதவிகிதமாகவும் இருக்கிறதாம்.
விலை வாசி விவரம்
- தானியங்கள் 6.96 %
- மீன் இறைச்சி 18.81 %
- முட்டை 8.79 %
- பால் 6.60 %
- எண்ணெய் & கொழுப்புகள் 12.41 %
- பழங்கள் 0.13 %
- காய்கறிகள் 11.29 %
- பருப்பு வகைகள் 15.92 %
- சர்க்கரை 3.60 %
- மசாலா பொருட்கள் 13.27 %
- எரிபொருள் 2.80 % என விலைவாசி அதிகரித்து இருக்கிறதாம். மேலே சொன்னது, அனைத்து இந்திய மாநிலங்களுக்கான சராசரி விவரங்கள் மற்றும் விலைவாசி விவரங்கள்.
தமிழகம்
தமிழகத்தில் ஜூலை 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கமும் (CPI Inflation) இந்த அறிக்கையிலேயே வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்துக்கு மட்டும் எனப் பார்த்தால் ஜூலை 2020-க்கான நுகர்வோர் பணவீக்கம் 7.07 சதவிகிதமாக இருக்கிறது. அனைத்து இந்திய சராசரியான 6.93 சதவிகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான்.
கிராமம் & நகரம்
தமிழகத்தின் நகர் புறத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.96 சதவிகிதமாகவும், தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 7.24 சதவிகிதமாகவும் இருக்கிறது. இது ஜூலை 2019 உடனான ஒப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து இந்தியாவைப் போலவே, தமிழகத்திலும், நகர் புறத்தை விட, கிராம புறத்தில் தான் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications