சமீபத்தில் யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி ஆகியவை அவற்றின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் அனைத்து யூடிலிட்டி கட்டணங்களுக்கு மே 1, 2024 முதல் புதிதாக 1% கட்டணத்தை அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது 4 முன்னணி வங்கிகள் தனது வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பல பெரிய வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. இந்த மாற்றங்களில் முக்கியமாக கிரெடிட் ரிவார்டு புள்ளிகள், கட்டணங்கள் நீககம், ரிவார்டு பாயின்ட்ஸ் தொடர்பான பலன்கள், கார்டுகளின் மதிப்பு குறைப்பு போன்றவை அடங்கும்.

இந்த நிலையில் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டு விதிமுறைகள்: எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ கார்டு, சில கிரெடிட் கார்டுகளுக்கு அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ஜூலை 1, 2024 முதல் ரிவார்டு புள்ளிகள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது மின்சார கட்டணம், கேஸ் பில் போன்ற அரசு தொடர்பான பேமெண்ட்களுக்கு இனி ரிவார்ட் பாயின்ட்ஸ் இல்லை.
எஸ்பிஐ கார்டு இணையதளத்தின் தகவல்படி, ஜூலை 15, 2024 முதல் அரசாங்கம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ரிவார்டு புள்ளிகள் கிடைக்காது என்று பட்டியலிட்டு உள்ள கிரெடிட் கார்டுகளின் பட்டியல் இதுதான்.
Air India SBI Platinum Card
Air India SBI Signature Card
Central SBI Select+ Card
Chennai Metro SBI Card
Club Vistara SBI Card
Club Vistara SBI Card PRIME
Delhi Metro SBI Card
Etihad Guest SBI Card
Etihad Guest SBI Premier Card
Fabindia SBI Card
Fabindia SBI Card SELECT
IRCTC SBI Card
IRCTC SBI Card Premier
Mumbai Metro SBI Card
Nature's Basket SBI Card
Nature's Basket SBI Card ELITE
OLA Money SBI Card
Paytm SBI Card
Paytm SBI Card SELECT
Reliance SBI Card
Reliance SBI Card PRIME
Yatra SBI Card
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கட்டணங்கள்: இந்தியாவின் 2வது பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கி, ஜூலை 1, 2024 முதல் பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளுக்கும், (எமரால்ட் பிரைவேட் மெட்டல் கிரெடிட் கார்டு தவிர) கார்டு ரீப்லேஸ்மென்ட் கட்டணம் ரூ.100 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இது தவிர பல கட்டணங்களை குறைந்துள்ளது. இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள்.
சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகள் - ஆக்சிஸ் வங்கி: சிட்டி வங்கி கிரெடிட் கார்டு வர்த்தகத்தை ஆக்சிஸ் வங்கி கைப்பற்றியதைத் தொடர்ந்து. இது ஜூலை 15, 2024க்குள் சிட்டி பேங்க் கணக்குகளை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றும் பணிகள் நிறைவடைவது விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் புதிய ஆக்சிஸ் வங்கி கார்டுகளை (ஆண்டின் இறுதிக்குள்) பெறும் வரை சிட்டி பிராண்டட் கார்டுகள் தொடர்ந்து இயங்கும் என அறிவித்துள்ளது.
சிட்டி வங்கி டூ ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றுவது வரையில் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் சேகரித்த புள்ளிகள் காலாவதியாகாது. ஆனால், இடம்பெயர்வுக்குப் பிறகு பெறப்பட்ட புள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் என அறிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக 29-08-2024 அன்று பெறப்பட்ட புள்ளிகள் 29-08-2027 அன்று காலாவதியாகும் என தெரிவித்துள்ளது.
Tata Neu Infinity HDFC வங்கி கிரெடிட் கார்டு: 01 ஆகஸ்ட் 2024 முதல், தகுதியான UPI பரிவர்த்தனைகளுக்கு அதன் வாடிக்கையாளர்கள் இக்கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு 0.5% NeuCoins ஆக கேஷ்பேக் பெறுவார்கள். கூடுதலாக, யூபிஐ பரிவர்த்தனைக்கு Tata Neu UPI ஐடியைப் பயன்படுத்தினால், கூடுதல் 1% NeuCoins பெறுவீர்கள்.
HDFC வங்கி கடன் அட்டை விதிகள்: HDFC வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி CRED, Paytm, Cheq, MobiKwik மற்றும் Freecharge போன்ற தளங்கள் மூலம் செய்யப்படும் வாடகை பேமெண்ட்களுக்கு புதிதாக கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு 1% கட்டணம் விதிக்கப்படும். இது ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications