சரக்கு மற்றும் சேவை வரி வசூல் டிசம்பர் 2024 இல் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைக் காட்டி வருகிறது, இந்த மாதம் ரூ.1.77 லட்சம் கோடியை எட்டியுள்ளது, கடந்த ஆண்டு அதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.1.65 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 7.3% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வரி வசூல் அதிகரித்துள்ளது மூலம் இந்தியா முழுவதும் வர்த்தகம் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதை காட்டுகிறது.
அடுத்த ஒரு மாதத்தில் மத்திய அரசு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள வேளையில் நாட்டின் வரி வசூல் உயர்ந்திருப்பது அரசின் கஜானாவில் கூடுதல் வருமானத்தை சேர்க்கும் விஷயமாக உள்ளது.

டிசம்பர் மாத வசூலில் மத்திய ஜிஎஸ்டி ரூ.32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.47,783 கோடி மற்றும் செஸ் கட்டணம் ரூ.11,471 கோடி ஆகியவை அடங்கும். இந்த வரி வசூலில் ஏற்பட்ட உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாக உள்நாட்டு பரிவர்த்தனைகளின் அதிகப்படியான வளர்ச்சி முக்கிய பங்களித்துள்ளது.
உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஜிஎஸ்டி வருவாய் 8.4% அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியை எட்டியது. அதே நேரத்தில், இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் 4% வளர்ச்சியுடன் ரூ.44,268 கோடியை எட்டியது.
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டினாலும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.1.82 லட்சம் கோடி என்ற சாதனை அளவை விட சிறிது குறைவாகவே உள்ளது. இதுவரை பதிவான அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் அளவு என்றால் அது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் அளவு தான்.
இதேவேளையில் ஜிஎஸ்டி ரீபண்ட் அளவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தகலல் வெளியாகியுள்ளது. இது டிசம்பர் மாதத்தில் ரூ.22,490 கோடி அளவில் ஜிஎஸ்டி வரி ரீபண்ட் செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரீபண்ட் தொகை 31% அதிகமாகும். இந்த ரீபண்ட் தொகை மொத்த வரி வசூலில் இருந்து கழித்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.54 லட்சம் கோடியாக உள்ளது, இது வருடாந்திர அடிப்படையில் 3.3% வளர்ச்சியாகும்.
ஜிஎஸ்டி வசூலில் தொடர்ந்து அதிகரித்து வருவது வலுவான உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியை காட்டுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications