இணையச் சேவைகள் வாயிலாக நாளுக்கு நாள் மோசடி அதிகரித்து வரும் வேளையில், தற்போது டெல்லியில் ஹோட்டல் முதலாளி உடன் இளம் பெண்கள் தொடர்பு வைத்து கொண்டு விநோதமான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக பல இளைஞர்கள் டிவிட்டரில் கதற துவங்கியுள்ளனர்.
பம்பிள் என்ற டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணுடன் டேட்டிங் சென்ற டெல்லி இளைஞன் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.

டிவிட்டரில் அர்ச்சித் குப்தா என்ற நபர் செய்த பதிவின் படி, டெல்லியின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் ரஜோரி கார்டன் உணவகத்தில் (Rajouri Garden restaurant), டேட்டிங் ஆப் பழக்கத்தின் மூலம் ஒரு பெண்ணைச் சந்தித்துள்ளார்.
அர்ச்சித் குப்தா தனது பதிவில் ரஜோரி கார்டன் உணவகம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பெண்களுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்வதாகக் கூறினார். மேலும் ஆர்டர் செய்யப்பட்ட உணவின் விலையைக் காட்டிலும் அதிகத் தொகைக்குப் பில் போட்டுப் பாவப்பட்ட வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகக் கூறினார்.
அர்ச்சித் குப்தா பதிவின் கீழ் இந்த மோசடி புதியதல்ல எனப் பலரும் டிவீட் செய்த போது அவருக்குத் தூக்கி வாரிப்போட்டு உள்ளது. பம்பிள் மற்றும் டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்ஸ் மூலம் ரஜோரி கார்டனில் The Race Lounge and Bar என்ற உணவகத்தில் சந்திக்கும் பெண்கள் வாயிலாகப் பணத்தை ஏமாற்றிய ஆண்களின் பதிவுகள் சமூக ஊடகங்கள் மற்றும் ரெடிட் தளத்தில் நிறைந்துள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
எப்படி இந்த மோசடி நடக்கிறது..? பம்பிள் மற்றும் டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்ஸ் மூலம் நடக்கும் இந்த மோசடி, பெண்கள் ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் மட்டுமே தங்களுடன் மேட் செய்யும் ஆணை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
அங்குச் சென்றதும் அப்பெண்கள் வழக்கம் போல் உணவையும், மதுவையும் ஆர்டர் செய்கிறார்கள், சில காரணங்களைச் சொல்லிவிட்டுப் பில் வருவதற்கு முன்பு அல்லது பில் தொகையை அந்த ஆண் செலுத்த வலியுறுத்தி பில் தொகையைச் செலுத்தியது உறுதி செய்யப்பட்ட உடன் அவசர அவசரமாக எஸ்கேப் ஆகிறார்கள்.
பெரும்பாலான நேரத்தில் அப்பெண்கள் வெளியேறிய பின்பு தான் பில் வருகிறது, இப்படி அர்ச்சித் குப்தா டேட்டிங் சென்ற போது அந்தப் பெண்ணும், அவரும் ஒரு ரெட் புல், ஒரு ஹூக்கா, ஒரு ஓட்கா ஷாட், இரண்டு முதல் மூன்று கிளாஸ் ஒயின், ஒரு ப்ளேட் சிக்கன் டிக்கா மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் சாப்பிட்டதற்குப் பில் ரூ.15,886 ஆகும்.

மேலும் 25 வயதான அர்ச்சித் குப்தா , பம்பிள் செயலியில் திவ்யா ஷர்மா என்ற பெண்ணைச் சந்தித்ததாகவும், அவர் போலி பெயரில் செயல்பட்டதாகவும், ட்ரூகாலரில் அந்தப் பெண்ணுடைய மொபைல் எண்ணை வைத்து அவருடைய உண்மையான பெயர் ஐஃபியா (Aifya) எனத் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
15,886 பில்லை பார்த்து அதிர்ச்சி அடைய அர்ச்சித் குப்தா கார்ட் மூலம் பணத்தைச் செலுத்திய பின் பாத்ரூம் சென்று வந்த அடுத்த நொடியிலேயே டேபிள் மீது வைக்கப்பட்ட பில் காணவில்லை. வீட்டுக்கு வந்த பின்பு தான் இது மோசடி எனப் புரிந்தது, மேலும் பம்பிள் செயலியை செக் செய்த போது அந்தப் பெண் மாயமானார், ப்ரொபைல்-ஐ டெலிட் செய்துவிட்டார். வேலை முடிந்தது..!


Click it and Unblock the Notifications