தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போது வரும் அட்சய திருதியை – இந்த ஆண்டு விற்பனை எப்படி இருக்கும்?

வரும் 30ஆம் தேதி நாடு முழுவதும் அட்சய திருதி கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை என்றாலே நகை விற்பனையாளர்களுக்கு தான் கொண்டாட்டம். ஏனெனில் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்றைய தினம் ஏராளமான மக்கள் நகை வாங்குவார்கள்.

அட்சய திருதியைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தங்கத்தின் விலை நாள்தோறும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போது வரும் அட்சய திருதியை – இந்த ஆண்டு விற்பனை எப்படி இருக்கும்?

இந்தியாவில் அட்சய திருதியை தினத்தின் போது நகை வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அட்சய திருதியை அன்று ஏராளமான மக்கள் நகைக்கடைகளுக்கு சென்று தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வாங்கி வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நகை கடைகளும் அட்சய திருதியை விற்பனைக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,002 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,821 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 72,016 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை இப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில் அட்சய திருதியை அன்று விற்பனை மந்தமாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிப்பதால் அதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இந்த சூழலில் தான் பாரம்பரியமாக அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தை வாங்கும் பழக்கம் இருப்பதால் மக்கள் தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வாங்க முன் வருவார்கள் எனவே இந்த ஆண்டும் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்கும் என சில நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறைந்த எடை கொண்ட நகைகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்டவற்றை இந்த முறை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதாக பல்வேறு நகைக்கடை உரிமையாளர்களும் கூறுகின்றனர். சில கடைகளில் முன் கூட்டியே தங்கத்தை ரிசர்வ் செய்து அட்சய திருதியை அன்று விலை எவ்வளவாக இருந்தாலும் ரிசர்வ் செய்த விலைக்கே வாங்கி கொள்ளலாம் என்பன உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரையிலான இந்த நான்கு மாத காலத்தில் மட்டும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை 25 சதவீதம் உயர்ந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+