கடந்த சில ஆண்டுகளில் வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்கி வருகிறது. இதன் மூலம் மொத்த தங்க இருப்புக்கள் தற்போது 1990 களில் அளவான 37,000 டன்களாக மீண்டும் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை எப்போது ரகசியமாகத் தான் செய்யும், இதனால் எந்த நாட்டு எப்போது வாங்குகிறது எனத் தெரியாது ஆனால் காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர சொத்து விபரங்கள் வெளியீட்டின் சில தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய வங்கிகள் வாங்கியுள்ள தங்க அளவுகள் தனியார் முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
400 டன் தங்கம்
2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதாவது வெறும் 3 மாதங்களில் கிட்டத்தட்ட 400 டன் அளவிலான தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
உறவு
மத்திய வங்கிகளுக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவு எப்போதும் ஒரு சிறப்பு வாய்ந்ததாகவே இருந்து வருகிறது. 1970 களில் பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டம் வீழ்ச்சி இடைந்த பிறகு சில மத்திய வங்கிகள் அதிகளவிலான தங்கத்தைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ்
ஆனாலும் தங்கம் இன்னும் வளர்ந்த நாடுகளின் சொத்து இருப்புகளில் கணிசமான பங்கைக் தங்கம் கொண்டுள்ளது முக்கியமானதாக விளங்குகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கி தான் அதிகம் தங்கம் விற்பனை செய்கிறது.
மத்திய வங்கிகள்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு சில மத்திய வங்கிகள் மட்டும் அல்லாமல் பரவலாக அனைத்து மத்திய வங்கிகளும் தங்கத்தைப் பெரும் தொகையைக் கொடுத்து வாங்கியுள்ளது.
முழு விபரம்
உலகில் யாரெல்லாம் அதிகம் வாங்கியுள்ளார்கள் என்பதற்கான முழு விபரம் இல்லாமல் விட்டாலும், சில நாடுகள் குறித்த தரவுகள் கிடைத்துள்ளது. இந்த வகையில் இந்தியா 17 டன், துருக்கி 31 டன், உஸ்பெகிஸ்தான் 26 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.
ரஷ்யா
இந்தப் பட்டியலில் ரஷ்யாவும் இருக்க வேண்டும், ஆனால் உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா தனது தங்க இருப்புகளைப் பொது வெளியில் வெளியிடுவதை நிறுத்திவிட்டது. இருப்பினும், இந்தியா, துருக்கி, உஸ்பெகிஸ்தான் உடன் ரஷ்யாவைச் சேர்த்தாலும், 400 டன் என்ற அளவை ஒப்பிடும் போது ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
தங்கம் மீது முதலீடு
இதன் மூலம் சில மத்திய வங்கிகள் முன்னணி நாடுகளைக் காட்டிலும் முன்கூட்டியே திட்டமிட்டு, போதிய ஆதாரங்கள் உடன் தங்கத்தை அதிகப்படியாக வாங்கிய மத்திய வங்கிகள் உள்ளனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. மத்திய வங்கிகளின் முந்தைய ஆண்டு விபரங்களைப் பார்க்கும் போது யார் அதிகமாக இந்தக் காலாண்டில் வாங்கியிருக்கிறார்கள் என்பதைக் கணிக்க முடியவில்லை என Next Generation Research அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்க முதலீட்டில் லாபம்
2010 முதல் மத்திய வங்கிகளின் தங்கம் வாங்குதல் மூலம் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 4 சதவீதமும், இரண்டு ஆண்டுகளில் சுமார் 7 சதவீதமும் வருமானத்தை அளித்துள்ளது. இது தங்கத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு உடனும் ஒத்துப்போகிறது.
தங்க இருப்பு
மேலும், மத்திய வங்கியின் தங்க இருப்புக்கும் அதன் நாணயத்தின் ஸ்திரத்தன்மைக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி வருகிறது. உதாரணமாகத் துருக்கி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, அந்நாட்டின் நாணயம் மற்றும் நம்பிக்கை தன்மை குறைவாகவே உள்ளது.
2015 முதல்
இதேபோல் 2015 முதல் அதிகம் தங்கம் வாங்கிய மத்திய வங்கிகள் பட்டியலில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. ரஷ்யா சுமார் 1000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. 2வது இடத்தில் சீனா சுமார் 850 டன்களுடன் உள்ளது. 3வது இடத்தில் இந்தியா 220 டன்களுடன் உள்ளது.
ரஷ்யா, சீனா, இந்தியா
டாப் 3 இடங்களை ரஷ்யா, சீனா, இந்தியா பிடித்துள்ளது, இதைத் தொடர்ந்து துருக்கி, கஜகஸ்தான், போலாந்து, ஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஹங்கேரி, ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், அஜர்பைஜான், பிரேசில், எகிப்த் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?



Click it and Unblock the Notifications