ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) ஆன்லைன் ரியல் மணி கேமிங் நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 55,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரி நிலுவை தொடர்பாக 12 க்கும் அதிகமான ஃபரீ ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் டெல்டா கார்ப் என்னும் கசினோ நிறுவனத்திற்கு 11,140 கோடி ரூபாய் மதிப்பிலான வரி நிலுவை தொடர்பான நோட்டீஸ் ஜிஎஸ்டி அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில் டெல்டா கார்ப் பங்குகள் சுமார் 33 மாத சரிவை எட்டி கடந்த ஒரு வாரத்தில் 20 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த நிலையில் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் பிளாட்ஃபார்ம் ட்ரீம்11க்கு ரூ.25,000 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி அறிவிப்பும் உட்பட ரூ. 55,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரி நிலுவை தொடர்பாக 12 க்கும் அதிகமான ஃபரீ ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஜிஎஸ்டி அமைப்பு.
சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பில் எடுத்த 28 சதவீத வரியை ஆன்லைன் கேமிங், கசினோ, குதிரை பந்தயம் ஆகிய அனைத்திற்கும் விதிக்க நடைமுறைப்படுத்தியது. இதை தொடர்ந்து ஜிஎஸ்டி வரி நிலுவை தொடர்பாக அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் வரவிருக்கும் வாரங்களில் அதிக நோட்டீஸ்-களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரியல் மணி கேமிங் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி நிலுவைக்கான நோட்டீஸ் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜிஎஸ்டி வரி அமைப்பின் நோட்டீஸ் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் ட்ரீம் 11 மட்டும் அல்லாமல் Play Games24x7, Head Digital Works, RummyCircle, My11Circle போன்ற முன்னணி நிறுவனங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ட்ரீம் 11 ஜிஎஸ்டி அமைப்பின் ஷோகாஸ் நோட்டீஸ்-ஐ அடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications