ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டத்திற்கே பர்ஸ் காலியாகி விடும் நிலையில் வட இந்தியாவில் பல சமூகங்கள் தீபாவளி பண்டிகையை ஐந்து நாள் விளக்குத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இதன் படி 2023 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இன்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தந்தேராஸ் பண்டிகைக்கும் வர்த்தகத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது, காரணம் இந்தப் பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் செல்வம் பெருகும் என மக்கள் அதிகளவில் நம்புகின்றனர். நவம்பர் 10 ஆம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படும் தந்தேராஸ் புனித நாளில் உலோகங்களான தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் ஆகியவற்றை வாங்குகிறார்கள்.

தந்திரயோதசி என்றும் அழைக்கப்படும் தந்தேராஸ் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது முற்றிலும் செல்வத்தின் கடவுளின் நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுத் தந்தேராஸ் நவம்பர் 10 ஆம் தேதியும். இவ்விழாவைத் தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி சோட்டி தீபாவளி அதாவது குட்டி தீபாவளி, நவம்பர் 12 ஆம் தேதி முக்கியப் பண்டிகையான தீபாவளியும், நவம்பர் 13 ஆம் தேதி கோவர்தன் பூஜையும், நவம்பர் 14 ஆம் தேதி பாய் தூஜ் விழாவும் நடைபெறும்.
தந்தேராஸ் அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் பார்ப்பது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. பலர் தந்திரயோதசி துவங்கிய உடன் வாங்குவது வழக்கம், பலர் தந்தேராஸ் முகூர்த்த நாளில் வாங்குவது நம்புவார்கள். இப்படியிருக்கையில் வீட்டிலும், தொழில்களிலும் செல்லம் பொங்க கார்ப்பரேட் ஜோதிடரான ஆச்சார்யா டாக்டர் லவ்பூஷண் தந்தேராஸ் நாளில் தங்கத்தை எப்போது வாங்க வேண்டும் எனக் கூறுகிறார்.
லவ்பூஷண் கூறுகையில் இந்த ஆண்டுத் தந்தேரஸ் முகூர்த்த நேரம் நவம்பர் 10 ஆம் தேதி மதியம் 12:35 மணிக்குத் தொடங்கி நவம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் 1:57 வரை நீடிக்கும் என்று கூறுகிறார்.
எனவே தந்தேராஸ் பண்டிகைக்காகத் தங்கம் வாங்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் நவம்பர் 10 ஆம் தேதி அன்று தங்க நாணயம் அல்லது நகைகளைத் தந்தேராஸ் சுப முகூர்த்த நேரமான மதியம் 12:35 மணிக்கு மேல் வாங்க வேண்டும். இதேபோல் நவம்பர் 11 ஆம் தேதி தங்கம் வாங்கத் திட்டமிட்டால், மதியம் 1:57 மணி வரை வாங்கலாம்.
கடந்த ஆண்டுத் தந்தேராஸ் பண்டிகையின் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 50,062 ரூபாயாக இருந்த நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி 10 கிராம் தங்கம் விலை 61,250 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு வருடத்தில் 20.10 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் அதிகரித்து 56450 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் உயர்ந்து 61,580 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 300 ரூபாய் உயர்ந்து 45,160 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications