இன்று இந்தியா முழுவதும் தன்தேரஸ் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவாக ஆர்வமாக உள்ளனர். காரணம் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு தான். தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளாக இன்று தன்தேரஸ் பண்டிகை வடஇந்திய மக்கள் பெரும் விமர்சியாக கொண்டி வருகின்றனர்.
Dhanteras பண்டிகையை சின்ன தீபாவளி எனவும் அழைக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, தன்தேரஸ் பூஜை முகூர்த்த நேரம் இரவு 7:15 மணி முதல் 8:19 மணி வரை நீடிக்கும். இந்த சுப நேரத்தில் வழிபாடு செய்வது செழிப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இதேபோல் இந்த நேரத்தில் மக்கள் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை மட்டும் அல்லாமல் பல்வேறு பொருட்களை வாங்குவது மூலம் செல்வ செழிப்பை பெற முடியும் என தீவிரமாக நம்புகின்றனர்.

தன்தேரஸில் வாங்க வேண்டிய பொருட்கள்
தங்கம் மற்றும் வெள்ளி, தன்தேரஸில் வாங்குவதற்கு மிகவும் சிறப்பானவையாக கருதப்படுகிறது. ஆனால் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விற்கும் விலைக்கு அனைவராலும் வாங்குவது கடினம்.
வீட்டில் செல்வத்தை சேர்க்கும் முக்கிய பண்டிகையாக கருதப்படும் இந்த நாளில் வீட்டை எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாக்கப்பது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வெள்ளி தாண்டி புதிய பாத்திரங்கள், செம்பு, பித்தளை அல்லது ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவது மூலமும், வீட்டில் செல்வ செழிப்பு மற்றும் வளத்தை பெருக்கும் என நம்பப்படுகிறது.
இதேபோல் லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகள் அல்லது படங்கள் வாங்குவது, தனியா (கொத்தமல்லி) மற்றும் உப்பு போன்றவை சில குடும்பங்களில் வாங்கும் கலாச்சாரமும் உள்ளது. இதேபோல பலர் துடைப்பத்தை வாங்கும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
தன்தேரஸில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்
தன்தேரஸ் செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையது என்றாலும், சில பொருட்கள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்பதால் சில பொருட்களை இந்த நாளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கூர்மையான பொருட்கள் உதாரணமாக கத்தரி அல்லது கத்திகள் வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது. இரும்பு பொருட்கள், பாத்திரங்கள் அல்லது கருவிகள் வாங்க கூடாது. உடைந்த பொருட்கள், விரிசல் உள்ள பாத்திரங்கள், கிழிந்த உடைகள் அல்லது சிதைந்த அலங்காரப் பொருட்கள் தவிர்க்க வேண்டும்.
கருப்பு நிற பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. இதேபோல் தோல் பொருட்களை அசுத்தமானவை என கருதப்படுவதால் இதையும் தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications