தீபாவளி எபக்ட்: தங்கம் விலை 1.50 லட்சத்தை தாண்டும்.. அடித்து சொல்லும் நிபுணர்கள்..!!

தன்தேரஸ் பண்டிகை தமிழ்நாட்டில் பெரிய அளவில் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், தங்கம் விலை உயர்வால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலமாக தினமும் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் வேளையில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 3000 ரூபாய் தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ஆனாலும் இது முதலீட்டாளர்களைத் தடுக்கவில்லை.

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தன்தேரஸ் 2025 கோல்டு ரிப்போர்ட்-ல், வர்த்தகர்கள் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீபாவளி எபக்ட்: தங்கம் விலை 1.50 லட்சத்தை தாண்டும்.. அடித்து சொல்லும் நிபுணர்கள்..!!

உலகளாவிய பொருளாதார சூழல்கள் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக மாற்றியுள்ளது. இதனால் தற்போது இருக்கும் விலை உயர்வு 2026 வரை தொடரும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், தங்கத்தை சரியான நேரத்தில் வாங்குவது லாபகரமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை, தங்க சந்தையின் விரிவான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்கு தெளிவான பார்வையை வழங்கியுள்ளது.

உலக அளவிலான மந்தமான பொருளாதார வளர்ச்சி சிக்னல், அமெரிக்க பத்திர முதலீட்டில் லாபம் அளவுகள் குறைவது, உலர மத்திய வங்கிகளின் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிப்பது மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை, தங்கத்தின் பாதுகாப்பு ஈர்ப்பை அதிகரித்துள்ளன. இதனால் உள்நாட்டு டிமாண்ட் மூலம் ஏற்பட்ட விலை உயர்வை தாண்டி இந்த விலை உயர்வு போக்கு 2026 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அக்டோபர் 17, 2025 அன்று, இந்தியாவில் தங்க விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் 1,32,770 ரூபாய் என்ற அளவில் உள்ளது. உலக சந்தையில் காமெக்ஸ் தங்க விலை ஒரு அவுன்ஸுக்கு 4,349.62 அமெரிக்க டாலர்கள் என்ற உச்சத்தில் வர்த்தகமாகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு வரை, தங்கம் 60 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை அளித்துள்ளது.

அறிக்கையின்படி, வர்த்தகர்கள் விலை சரிவுகளை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, 10 கிராம் தங்கத்தின் விலை 1,05,000 முதல் 1,15,000 ரூபாய் வரை குறையும் போது மிஸ் செய்யாமல் வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தக போக்கு தங்கத்திற்கு சாதகமாக இருப்பதால், இந்த உத்தி லாபகரமாக இருக்கும்.

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதி, சரிவு ஏற்படும் போது வாங்குவது சிறந்தது. இது, பொருளாதார ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கும். மேலும் தங்கத்தின் விலை உயர்வு மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் இடிஎஃப் முதலீட்டுகள் மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது.

மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் 1,180 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளன, அடுத்த ஆண்டு 1,000 டன்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தீபாவளி வரை, தங்க விலை 1,45,000 முதல் 1,50,000 ரூபாய் வரை உயரலாம் என்று ஆக்சிஸ் வங்கி கணிப்புகள் கூறுகிறது. இது, தற்போதைய விலையில் இருந்து சுமார் 30 சதவீதம் உயர்வை குறிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+