தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் திரயோதசி திதியில், அதாவது தனத்திரயோதசி அன்று, ஐந்து நாள் கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. 'தன்' என்பது செல்வத்தையும், 'தேரஸ்' என்பது கிருஷ்ண பட்சத்தின் பதிமூன்றாம் நாளையும் குறிக்கிறது.
செல்வம் பெருகும் இந்தத் திருநாளில், மக்கள் தங்கம், வெள்ளி போன்ற முக்கிய பொருட்களை வாங்குவதிலும், முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். 2025 ஆம் ஆண்டு தனத்திரயோதசி திருநாள் எப்போது வருகிறது, தங்கம், வெள்ளி வாங்க உகந்த நேரம் எது என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை: இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 3000 ரூபாய் உயர்ந்து 1,22,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 3270 ரூபாய் உயர்ந்து 1,33,090 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 2616 ரூபாய் உயர்ந்து 1,06,472 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 3000 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2,03,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1350 ரூபாய் குறைந்து 48,200 ரூபாயாக உள்ளது.
தன்தேரஸ் பண்டிகை நேரம்:
2025 ஆம் ஆண்டு தனத்திரயோதசி அக்டோபர் 18 அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்று திரயோதசி திதி நண்பகல் 12:18 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 18 அன்று பகல் 01:51 மணிக்கு முடிவடைகிறது.
தன்தேரஸ் பண்டிகை தென்னிந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், இந்த நாளில் தங்கம் வாங்கவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டும் மக்களுக்கு இந்நாளில் குறித்த நேரத்தில் வாங்க வேண்டும் என்ற எண்
மேலும் தன்தேரஸ் பண்டிகையில் தன பூஜை செய்வதற்கான உகந்த நேரம், அக்டோபர் 18 அன்று மாலை 07:15 மணி முதல் இரவு 08:19 மணி வரை ஆகும். பிரதோஷ காலம் மாலை 05:48 மணி முதல் இரவு 08:19 மணி வரையிலும், விருஷப காலம் இரவு 07:15 மணி முதல் இரவு 09:11 மணி வரையிலும் நீடிக்கும்.
தன்தேரஸ் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரம்:
அக்டோபர் 18 அன்று நண்பகல் 12:18 முதல் மறுநாள் அக்டோபர் 19 அன்று காலை 06:24 மணி வரை தங்கம் வாங்கலாம். மேலும், அக்டோபர் 18 அன்று பிற்பகல் 12:18 முதல் மாலை 04:23 மணி வரை மற்றும் மாலை 05:48 முதல் இரவு 07:23 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரங்கள்.
அக்டோபர் 19 அன்று அதிகாலை 04:50 முதல் காலை 06:24 மணி வரை (லாப) மற்றும் அக்டோபர் 19 அன்று காலை 07:50 முதல் பிற்பகல் 12:06 மணி வரை, பிற்பகல் 01:31 முதல் 01:51 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க சிறந்த நேரங்களாகக் கருதப்படுகின்றன.
தன்தேரஸ் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது ஏன் மங்களகரமானது?
இந்த நாளில் குபேரனையும், லட்சுமி தேவியையும் வழிபடுவது வழக்கம். தனத்திரயோதசி செழிப்பையும் செல்வத்தையும் குறிக்கிறது. எனவே, தங்கம், வெள்ளி மற்றும் பிற பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது ஐதீகம்.
செல்வ செழிப்புக்கான கடவுளான குபேரனையும், லட்சுமி தேவியையும் வணங்கி, இந்த பொருட்களைப் பூஜையறையில் வைப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நாளில் வடந்தியாவில் நகை கடைகள் நள்ளிரவு வரை திறந்திருக்கும், மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்குவார்கள். தனத்திரயோதசி அன்று தங்கம், வெள்ளி வாங்குவதன் மூலம் வீடு நிறைய செல்வம் சேரும் என்றும், குடும்பம் செழிப்பாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இவை அனைத்தும் மக்களின் நம்பிக்கையாக பார்க்கப்பட்டாலும், முதலீடு செய்யும் முன் தங்கம், வெள்ளி மீதான முதலீடு பலன் கொடுக்குமா என்பதை திட்டமிட்டு அதன் பின்பு முதலீடு செய்வதே உகந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications