கடைகளில் நகை வாங்கும் போது ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் வாங்கும் ஒரே நகைக்கு ஒரு கடையில் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். மற்றொரு கடையில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் செய்கூலி ஆகும். அதாவது மேக்கிங் சார்ஜ்.
மேக்கிங் சார்ஜ் என்றால் என்ன? இது எப்படி கணக்கிடப்படுகிறது?: நகையின் வடிவமைப்பு, கைவேலைப்பாடுகள், தயாரிப்பு முறை அகியவற்றையெல்லாம் பொறுத்து தான் இந்த மேக்கிங் சார்ஜ் நிர்ணயிக்கப்படுகிறது. சில கடைகள் கிராமுக்கு இவ்வளவு என்று பிக்சட் ஆக வைத்திருப்பார்கள். ஆனால் சில கடைகள் தங்கத்தின் விலையில் குறிப்பிட்ட சதவீதத்தை மேக்கிங் சார்ஜாக நிர்ணயித்திருப்பார்கள். இதனால் தான் மெஷின் தயாரிப்பில் செய்யப்படும் நகைகளுக்கு குறைந்த மேக்கிங் சார்ஜ் விதிக்கப்படுகிறது. ஆனால் கைவேலைப்பாடுகளால் செய்யப்படும் ஆன்டிக் நகைகளுக்கு மேக்கிங் சார்ஜ் அதிகமாக இருக்கிறது.

குறைந்த செய்கூலி இருந்தால் அந்த நகையை வாங்கலாமா?: குறைந்த செய்கூலியில் நகை விற்கப்படுகிறது என்பதற்காக அந்த கடையை தேர்ந்தெடுக்கக்கூடாது. தங்கத்தின் தரம், செய்கூலி, சேதாரம் மற்றும் இதர கட்டணங்களையும் ஆராய வேண்டும். தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகைக்காக சில நகைக்கடைகள் ஜீரோ மேக்கிங் சார்ஜுடன் நகை விற்பனையில் ஈடுபடலாம். ஆனால் இந்த விளம்பரத்தை பார்த்து நம்புவதற்கு முன் அன்றைய தினம் தங்கம் விலை என்ன? நகையின் நிகர எடை? ஜிஎஸ்டி, சேதாரம் மற்றும் முழு கட்டண விபரங்களையும் பார்க்க வேண்டும்.
தங்க நகையின் விலை எப்படி கணக்கிடப்படுகிறது?: ஒரு நகையின் விலை.. அன்றைய நாள் தங்கத்தின் மார்க்கெட் ரேட், பதிக்கப்பட்ட கற்களின் விலை, ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையெல்லாம் பொறுத்து கணக்கிடப்படுகிறது.
தங்கம் வாங்கும்போது பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி?: பெரிய பெரிய ஷோரூம்களில் செய்கூலி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் உள்ளூர் நகைக் கடைகளில் செய்கூலியை பேசி குறைத்துப் பார்க்கலாம். கோல்டு பார் மற்றும் கோல்ட் காயின் வாங்கும் போது செய்கூலி இல்லாமலும் வாங்கலாம்.
நகை வாங்க திட்டமிடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?: செய்கூலி 2 முறையாக கணக்கிடப்படுகிறது. ஒன்று கிராமுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்திருப்பார்கள். மற்றொன்று தங்கத்தின் மொத்த விலையில் இத்தனை சதவீதம் என்று நிர்ணயித்திருப்பார்கள். உதாரணமாக ஒரு கிராமுக்கு 300 ரூபாய் என்று சில கடைகளில் விற்பனையாகும். அதேபோல மொத்த தொகையில் 12 சதவீதம் என்று சில கடைகளில் நிர்ணயித்திருப்பார்கள்.
நீங்கள் 10 கிராம் மதிப்புள்ள தங்கத்தை வாங்குகிறீர்கள். அதற்கு சில கடையில் கிராமுக்கு 300 என்ற அடிப்படையில் 10 கிராம் X ரூ.300 = ரூ.3,000. அதுவே நீங்கள் நகை எடுக்கும் மொத்த கட்டணத்தில் 12 சதவீதம் என்றால் இன்றைய ரேட் 13,435 அதில் 10 கிராம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கும்போது ரூ.13,435 X 10 கிராம் = ரூ. 1,34,350. ரூ. 1,34,350-இல் 12% என்றால் ரூ.16,122 வரும்.
எனவே செய்கூலி பிக்சடாக இருக்கும் கடைகளை தேர்வு செய்வது தங்க நகைகளின் இறுதி விலையை குறைக்க உதவும். ஒரு வேலை தங்கத்தின் மார்க்கெட் ரேட் அதிகரித்தால் சதவீத அடிப்படையில் செய்கூலி விதிக்கப்படும் கடைகளில் விலை சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
