இந்தியா முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படும் வேளையில், நகை கடைகள் 2 நாட்களுக்கு முன்பே தன்தேரஸ் பண்டிகை நாளில் தீபாவளியை கொண்டாடி அசத்தியுள்ளது. தன்தேரஸ் பண்டிகை நாளில் இந்தியா முழுவதும் மக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதை பாரம்பரிய பழக்கமாக கொண்டு உள்ளனர்.
இதனால் இந்தியா முழுவதும் தன்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கம் நகை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயத்தின் விற்பனை கலைக்கட்டியுள்ளது.

இந்த ஆண்டின் தன்தேரஸ் நகை கடைகளின் விற்பனையுடன் கடந்த ஆண்டு வர்த்தகத்தை ஒப்பிடும்போது தங்க நகை விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து, சுமார் ரூ.60,000 கோடியை எட்டியுள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் எடை அளவில் பார்க்கும் போது பெரிய மாற்றம் இல்லை எனவும் நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து அனைத்திந்திய ஜெம் மற்றும் ஜூவ்வலரி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் எப்போதும் இல்லாமல் தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்களின் விருப்பத்தில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் ஜெம் மற்றும் ஜூவ்வலரி கவுன்சில் அமைப்பின் சேர்மன் ராஜேஷ் ரோக்டே, நவம்பர் 6ஆம் தேதி தங்கம் விற்பனை அளவு நாடு முழுவதும் 60000 கோடி ரூபாய் அளவீட்டை எட்டியிருக்க கூடும் என எதிர்பார்கிறோம், இதேவேளையில் கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையில் எடை அளவில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என நம்புகிறோம் என தெரிவித்தார்.
இதேபோல் மக்கள் இந்த ஆண்டு லைட் வையிட் நகைகள், 18 கேரட் நகைகள், சிறிய விலை கொண்ட தங்க நாணயம், வெள்ளி பார்களை தான் அதிகம் வாங்கியுள்ளனர் என தெரிவித்தார் ராஜேஷ் ரோக்டே.
சென்னை ரீடைல் சந்தையில் தீபாவளி தினம் என்றாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய விலையில் தான் வரத்தகமானது.
சென்னையில் நேற்றைய விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இன்று 22 கேரட் தங்கம் விலை 20 ரூபாய் உயர்ந்து 13,160 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் 18 கேரட் 1 கிராம் தங்கம் விலை 10 ரூபாய் உயர்ந்து 10,770 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 205 ரூபாய் அளவிலேயே உள்ளது. மேலும் கடந்த ஆண்டு தன்தேரஸ் பண்டிகை காலத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,32,400 ரூபாய்க்கு வர்த்தகமானது, இன்று 1,43,570 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இது கிட்டத்தட்ட 11,000 ரூபாய் அதிகம்.


Click it and Unblock the Notifications