தந்தேராஸ் பண்டிகையில் சம்பவம்.. தங்கம் விற்பனை அமோகம்.. ஆப்பிள், சியோமி எல்லாம் ஓரம்போங்க..!!

வெள்ளிக்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாநிலங்களில் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஒரு நாளில் இந்திய மக்கள் ஒட்டுமொத்த வர்த்தக சந்தையை புரட்டிப்போடும் அளவுக்கு ஷாப்பிங் செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஸ்மார்ட்போன், டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற நுகர்வோர் பொருட்களின் விற்பனையை காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியை தங்கம் தந்தேராஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளது.

தந்தேராஸ் பண்டிகையில் சம்பவம்.. தங்கம் விற்பனை அமோகம்.. ஆப்பிள், சியோமி எல்லாம் ஓரம்போங்க..!!

தந்தேராஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சுமார் 7.7% அதிகரித்து 42 டன்களாகவும், விலை மதிப்பில் மதிப்பில் 10% சதவீதம் அதிகரித்து 22,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளதாக இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) தெரிவித்துள்ளது.

தங்கம் விலை இரண்டு நாட்களில் சுமார் 1,500 குறைந்து ஒரு கிராம் ₹60,400 ஆக இருந்தது, இந்த விலை ஒவ்வொரு பிராந்தியத்திற்கு மாறுபடும். தமிழ்நாட்டில் மட்டுமே சென்னை, கோவை, மதுரையில் பெரும்பாலான நாட்களில் மாறுப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதத்தின் இறுதியில் தங்கம் விலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் காரணத்தால் தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விற்பனை குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அமெரிக்க பணவீக்கம் குறித்த ஜெரோம் பவலின் பேச்சு மொத்தத்தையும் மாற்றியது. கடந்த வாரத்தில் தங்கம் விலை 4 நாட்கள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை வர்த்தக சந்தை குறித்து நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சந்தை ஆராய்ச்சியாளர்கள் அதிகப்படியாக வாங்கப்படும் பொருட்கள் முதல் நடுத்தர பிரிவு தயாரிப்புகளின் விற்பனை இந்த பருவத்தில் ஒற்றை இலக்க வளர்ச்சியுடன் சிறிது முன்னேற்றம் கண்டு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நேற்றைய வர்த்தகத்தை பார்க்கும் போது நகர்ப்புறத்தில் தான் அதிகப்படியான வர்த்தகம் இருந்துள்ளது, கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் மிகவும் குறைவான வர்த்தகமே பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தந்தேராஸ் பண்டிகையில் தங்கம் மற்றும் ஆபரணங்களை வாங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படும் காரணக்தால் ஒரு நாள் விற்பனை அளவுகளில் ஸ்மார்ட்போன் விற்பனையை தாண்டி தங்கம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே நேரம் பண்டிகைக் காலமான நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் எப்போதும் தங்கம் விற்பனை அதிகமாகவே இருக்கும்.

மொபைல் போன் சந்தை கண்காணிப்பாளரான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் இந்த பண்டிகைக் காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சுமார் 8% அளவு வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளது, இது மூன்று வாரங்களுக்கு முன்பு அதன் ஆரம்பக் கணிப்பு 7% ஐ விட அதிகமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+