அதலபாதாளத்திற்குப் போன வைரத்தின் மதிப்பு.. 20 வருட சரிவு.. தங்கத்திற்கும் இதே நிலைமை தானா?

தங்கத்தை காட்டிலும் மதிப்புடைய சொத்துக்களாகப் பார்க்கும் வைரங்கள் தற்போது அதலபாதாளத்திற்குச் செல்ல துவங்கியுள்ளது. தற்போது சந்தையில் வைரங்கள் 2 வகையில் கிடைக்கிறது, ஒன்று இயற்கை வைரம், மற்றொன்று லேப் க்ரோன் வைரம்.

வைரத்தின் மதிப்பு காலம் காலமாக அதன் சப்ளை டிமாண்ட் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இப்படியிருக்கையில் செயற்கையாக உருவாக்கப்படும் வைரம் சந்தையில் புழக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் இயற்கை வைரங்களின் விலை 20 வருடச் சரிவை எட்டியுள்ளது.

அதலபாதாளத்திற்குப் போன வைரத்தின் மதிப்பு.. 20 வருட சரிவு.. தங்கத்திற்கும் இதே நிலைமை தானா?

இதைவிட முக்கியமாக உக்ரைன் - ரஷ்யா போர் துவங்குவதற்கு முன்பு 2021ஆம் ஆண்டில் வைரத்தின் உச்ச விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது சுமார் 30-40% குறைந்துள்ளது. மேலும் மேற்கத்திய நாடுகளின் தடையின் காரணமாக ரஷ்யாவில் இருந்து வரும் வைரம் சப்ளை மொத்தமாக முடங்கியுள்ளது.

பொதுவாக வைர வர்த்தக சந்தையில் அதிகம் விற்பனையாகும் 1 கேரட் இயற்கை வட்ட வடிவ வைரத்தின் ரீடைல் விலை 3530 - 3860 டாலர் வரையில் மட்டுமே உள்ளது. இந்த மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்கள் தான், இத்துறையில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் செயற்கை வைரத்தின் தன்மை இயற்கை வைரத்திற்கு இணையாக உள்ளது.

மேலும் இதன் விலையும் 80 சதவீதம் குறைவாக இருக்கும் காரணத்தால் மக்கள் அதிகளவில் செயற்கை வைரத்தைத் தேர்வு செய்து வருகின்றனர்.

Lab-grown diamonds உருவாக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் இயற்கை வைரத்திற்கு இணையான விலையில் விற்கப்பட்டது, ஆனால் இதன் சப்ளை அதிகரித்த பின்பு இதன் exclusivity குறைந்து அதன் விலையும் வேகமாகக் குறைந்து வருகிறது.

உதாரணமாக மார்ச் 2025ல் இருந்து கணக்கிட்டால் தற்போது Lab-grown diamonds விலை 29.9 சதவீதம் குறைந்துள்ளது, இதேகாலகட்டத்தில் இதை தரத்தில் இருக்கும் இயற்கை வைரத்தின் மதிப்பு 4 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய சந்தையில் இயற்கை வைரத்திற்கு ரஷ்யா கிங்மேக்கராக இருக்கும் நிலையில், தற்போது செயற்கை வைரத்திற்குச் சீனா மிக முக்கியமான சப்ளையராக உயர்ந்துள்ளது.

lab-grown diamond குளோபல் சப்ளையில் சுமார் 60 சதவீத சந்தையைச் சீனா மட்டுமே கொண்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் சீனாவின் செயற்கை வைரத்தின் ஏற்றுமதி அளவு 65.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்கத்திற்கும் இதே நிலைதானா..?

இதேபோல் தங்கத்தையும் செயற்கை முறையில் உருவாக்க முடியும் என கூறப்படுகிறது, அமெரிக்காவில் மாரத்தான் பியூஷன் என்னும் நிறுவனம் பாதரசத்தை அணுஉலையில் நியூக்ளியர் பியூஷன் மூலம் தங்கமாக மாற்ற முடியும் எனக் கூறியுள்ளது. இது மட்டும் சாத்தியமானால் தங்கம் விலையும் பெரிய அளவில் குறையும் எனக் கூறப்படுகிறது.

தங்கம் முக்கியமான முதலீட்டுச் சொத்தாக இருக்கும் வேளையில் உலக நாடுகள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. செயற்கை தங்கம் உருவாக்கப்பட்டு சந்தை வந்தால் தங்கம் விலையும் 20 வருடச் சரிவுக்கு வருமா..?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+