ஜெய்கர் , ஜெய்ப்பூர்: இந்தியாவில் அவசரநிலையை பிரகடனம் செய்த மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, அந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி தங்கப்புதையலை தேடியதாக டைம்ஸ் நவ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். அப்போது பத்திரிக்கை சுதந்திரம் முடக்கப்பட்டது ,ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், மக்களின் பெரும்பாலான உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு காலமாக எமர்ஜென்சி காலம் பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் இந்திரா காந்தி ஜெய்பூரின் ஜெய்கர் கோட்டையில் தங்க புதையலை தேடிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றி நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1975 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி பல்வேறு அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல் ஜெய்ப்பூரின் ராணி ராஜமாதா காயத்ரி தேவியையும் சிறையில் அடைத்தார். காயத்ரி தேவி கைது செய்யப்பட்டதற்கு பின்னணியில் வெளிநாட்டு பணம் தொடர்பான வழக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அவரது கைதுக்கு பின்னால் வேறொரு காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது தான் ஜெய்கர் கோட்டையில் மறைந்திருக்கும் தங்கப் புதையல்.
இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஜெய்ப்பூரில் ஜெய்கர் கோட்டையில் ஐந்து மாதத்திற்கு ஒரு மிகப்பெரிய புதையலை தேடும் பணியில் ஈடுபட்டதாம். ராணுவம், வருமான வரித்துறை, இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையினர் என நான்கு துறைகளை சேர்ந்தவர்களும் ஐந்து மாத காலம் ஜெயப்பூரின் ஜெய்கர் கோட்டையில் தங்கப் புதையலை தேடினார்கள் என்கிறது வரலாறு.
முகலாயர் ஆட்சியின் போது 1581 ஆம் ஆண்டு மன்னர் அக்பர் தன்னுடைய தளபதிகளுல் ஒருவரான முதலாம் ராஜா மன் சிங்கை ஜெய்பூருக்கு அனுப்பி வைத்தாராம். அப்போது முதலாம் ராஜா மன் சிங், காபூலில் இருந்து பெரும் தங்கப் புதையலை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் அதனை ராஜஸ்தானில் மறைத்து வைத்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதை The Invincible Fort of Amber புத்தகம் உட்பட பல்வேறு எழுத்தாளர்களும் இது தொடர்பாக தங்களுடைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ராஜா மன் சிங் இவ்வாறு தங்கத்தை புதைத்து வைத்ததை அக்பருக்கே கூட சொல்லவில்லையாம். இதனால் இந்த தங்க புதையல் குறித்து முகலாயர்களுக்கே தெரியாமல் போனதாம். இந்த நிலையில் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த தங்க புதையலை தேடினார்களாம். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெய்கர் கோட்டையில் தங்கப்புதையல் இருப்பதாக அந்த பகுதி மக்களிடையே தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தன.
இந்திரா காந்தி தலைமையிலான அரசு எமர்ஜென்சி காலத்தில் இந்த தங்கப் புதையலை தேடும் பணியை தீவிர படுத்தியது. ஜெய்ப்பூர் ராணி காயத்ரி தேவி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து மாத காலமும் ஜெய்கர் கோட்டையில் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் வருமான வரி துறையினர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டார்கள்.
ஜெய்கர் கோட்டையை கைப்பற்றி அங்கே இந்த தங்கப் புதையனை தேடி இருக்கிறார்கள். அப்பொழுது மூத்த செய்தியாளராக இருந்த ஷாம்ஸ் தாஹிர் கான் அளித்த பேட்டியில் அந்த காலகட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஜெய்கர் கோட்டையை சுற்றிக் கொண்டே இருந்தன, சஞ்சய் காந்தி அந்த பகுதியை வந்து நேரில் பார்வையிட்டார் என கூறியுள்ளார். ஜெய்கர் கோட்டையில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது, சில இடங்களில் பூமியிலும் தோண்டி தங்கத்தை தேடினர் எனக் கூறுகிறார். இந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு இந்த விவகாரம் சர்வதேச அளவில் பூதாகரமானது. ஏனெனில் அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஸல்பீக்கர் அலி புட்டோ பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிய கடிதமே இதற்கு காரணமானது.
அதில் ஜெய்பூரில் உங்கள் ஆணையின் கீழ் உங்களின் அரசு தேடி வரும் புதையல் பற்றி இந்த கடிதத்தை எழுதுகிறேன், இந்த புதையலில் பாகிஸ்தானிற்கும் பங்கு இருக்கிறது . அதாவது பாகிஸ்தானின் சொந்தமான தங்கமும் இதில் இருக்கிறது, அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என குறிப்பிட்டு இருந்தாராம். அதற்கு ஒரு மாதம் கழித்து பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு சொந்தமான பொருட்கள் அந்த புதையலில் இருப்பதாக நீங்கள் கடிதம் அனுப்பி இருந்தீர்கள், இது தொடர்பாக நான் சட்ட ரீதியிலான ஆலோசனைகளை மேற்கொண்டேன், அதில் நீங்கள் உரிமை கோருவதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என சட்ட ரீதியிலான நிபுணர்கள் எனக்கு விளக்கமாக தெரிவித்துவிட்டனர் என பதில் அனுப்பி இருந்தாராம்.
மேலும் அப்படி ஒரு புதையலை அங்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தாராம். ஆனால் பத்திரிக்கையாளர் ஷாம்ஸ் தாகிர் கான் இந்திரா காந்தி அந்த பகுதியில் எந்த ஒரு புதையலும் கிடைக்கவில்லை 230 கிலோ கிராம் அளவிலான வெள்ளி மட்டுமே கிடைத்தது என அறிவித்ததாக குறிப்பிடுகிறார். இருந்தாலும் அந்த பகுதியில் தங்கப் புதையிலிருந்து அதனை இந்திரா காந்தி தலைமையிலான அரசு எடுத்ததாக தகவல்கள் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.
ஏனெனில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை ஒரு நாள் முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு 50 லிருந்து 60 ராணுவ வாகனங்கள் சென்றதாக க்ரைம் டாக் ஒரு சந்தேகத்தை எழுப்பியது. ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட தங்கம் பின்னர் உருக்கப்பட்டு சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான் சில காலம் கழித்து பேட்டி ஒன்றில் பேசிய ஜெயப்பூர் ராணி காயத்ரி தேவி அந்த புதையல் சாபம் பெற்ற புதையல் எனக் கூறியிருந்தார். அதாவது அந்த புதையலை தேடியவர்கள், அதனை அடைய வேண்டும் என எண்ணியர்கள் அனைவரின் முடிவும் மோசமானதாகவே இருந்திருக்கிறது என கூறினாராம். சஞ்சய் காந்தி மற்றும் இந்திரா காந்தியின் மரணத்தை குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஜெய்கரில் அப்படி ஒரு புதையல் உண்மையாகவே இருந்ததா, அதனை இந்திரா காந்தி அரசு எடுத்து சென்றதா, இல்லை அப்படி ஒரு புதையலே இல்லை அது ஒரு கதையா என்பதற்கெல்லாம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இருந்தாலும் இந்த புதையல் தொடர்பான விவாதம் காலம் காலமாக நீடித்து கொண்டே இருக்கிறது.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications