ஏஐ துறை பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்தாலும், இத்துறையில் இருக்கும் போட்டி குறையாமல் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இணையாக ஏஐ தொழில்நுட்பத்தில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தச் சீனா தீவிரமாக முயற்சி செய்து வரும், இதேபோல் சீனாவில் இருந்து அதிகப்படியான ஓப்பன்சோர்ஸ் ஏஐ மாடல்களும் சந்தைக்கு வந்துகொண்டு இருக்கிறது.
ஆனால் இதேவேளையில் அமெரிக்காவின் சிப் தடைகள், சீன ஏஐ மாடல்கள் மீதான முடக்கம் ஆகியவற்றின் மூலம் சீனாவின் ஏஐ நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் இத்துறையின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

இந்த வருடம் ஜூன் மாத இறுதியில் இருந்து சீனாவின் 3 முக்கிய டெக்னாலஜி நிறுவன பங்குகள் அதிகம் கொண்ட குறியீடுகளின் மொத்த சந்தை மதிப்பு 1.7 டிரில்லியன் டாலரை இழந்துள்ளது. இந்த சரிவு அமெரிக்க ஏஐ சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு இணையான ஒரு சரிவாகப் பார்க்கப்படுகிறது.
உதாரணமாக 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் பல மடங்கு உயர்ந்த Z.AI, Zhongji Innolight போன்ற நிறுவனப் பங்குகளும் தற்போது பெரும் சரிவைச் சந்தித்து அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது.
மேலும் டெக் பங்குகள் அதிகம் கொண்ட ஹாங்காங் நாட்டின் ஹங் செங் டெக் குறியீடு தற்போது 2 வருட சரிவில் உள்ளது. இதேபோல் கம்பியூட்டர் ஹார்ட்வேர் நிறுவனப் பங்குகள் அதிகம் கொண்ட ChiNext Index இந்த வருடம் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொட்ட நிலையில் தற்போது 31 சதவீத சரிவில் உள்ளது. இதேபோல் சிப் நிறுவனங்கள் அதிகம் கொண்ட Star 50 Index குறியீடும் பெரும் சரிவில் உள்ளது.
சீனாவின் டீப்சீக் தான் ஒட்டுமொத்த சீன ஏஐ துறையின் வளர்ச்சிக்கு முகவரியாக இருந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்களின் அடுத்தடுத்த மேம்பட்ட மாடல்களின் அறிமுகம் காரணமாகச் சற்று பின்தங்கியுள்ளது.
இதேபோல் அமெரிக்க அதிக விலையில் கொடுக்கும் ஏஐ மாடல்களை சீன நிறுவனங்கள் தனது ஏஐ மாடல்களை மலிவான விலைக்கு வழங்கும் காரணத்தால் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வழிகளை வைத்து சீனாவின் ஏஐ வளர்ச்சியை முடக்கி வருகிறது.
இதன் வாயிலாக அமெரிக்காவின் நடப்பு நாடுகளும், சீனாவின் ஏஐ மாடல்களையும் அச்சுறுத்தலாகப் பார்க்கும் நாடுகளும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. சீனாவுக்கும், சீன ஏஐ மாடல்களுக்கும் பெரும் தடை உலகளவில் இருக்கும் காரணத்தால் சீன ஏஐ பங்குகள் தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது.
இதை போல் அமெரிக்க அரசு சீனாவுக்கான சிப் சப்ளை, கம்பியூட்டிங் பவர் சப்ளையை முடக்கக் கடுமையான கொள்கைகள், விதிகள், வரிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அமெரிக்கா, தைவான், தென் கொரியா ஏஐ பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்தாலும் இன்னும் மைனஸ் அளவுக்கு செல்லவில்லை.


Click it and Unblock the Notifications
