பிட்காயின், ஒரு காலத்தில் "டிஜிட்டல் தங்கம்" என்று புகழப்பட்டது, இப்போது அந்த பெயருக்கு ஏற்றாற்போல் செயல்படால் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது உலகளவில் வர்த்தக பிரச்சனைகள், வரி விதிப்புகள், கட்டுப்பாடுகள், தடைகள், போர் பதற்றம், அணுஆயுத சோதனை என பல பிரச்சனைகள் எழுத்துள்ள வேளையில் முதலீட்டாளர்கள் டாலர், ரூபாய், யூரோ, திராஹம் போன்ற நாணயங்களை விடுத்து மாற்று சொத்துக்களில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் கிரிப்டோகரன்சி தான் கிங்மேக்கராக இருக்க வேண்டும். ஆனால் இன்று பிட்காயின் நிலைமையோ படுமோசமாக உள்ளது.
பிட்காயின் விலை கடந்த ஒரு ஆண்டில் மட்டும்ட சுமார் 29 சதவீதம் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் தங்கம் விலை 69 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வேறுபாடு நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்கள் எப்படி சொத்துகளை பார்க்கின்றனர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தங்கம் தங்கம் தான், தங்கத்திற்கு மாற்று தங்கம் மட்டுமே என்பதை உணர்த்துகிறது.

இந்த வாரம் பிட்காயின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஐந்து நாட்களில் மட்டும் 17 சதவீதம் குறைந்துள்ளது. இது நவம்பர் 2022க்குப் பிறகு கண்ட மிகப்பெரிய வாராந்திர சரிவாகும். வியாழக்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் 70,000 டாலருக்கு கீழே சென்றுள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
பிட்காயின் 15 மாதங்களுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு கட்டத்தில் பிட்காயின் மதிப்பு 69,055 டாலர் வரை குறைந்தது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெரிதும் ஆட்டம் காணச் செய்துள்ளது. காரணம் 70000 டாலர் என்பது பிட்காயின் மதிப்பில் முக்கியமான சப்போர்ட் லெவல், இதற்கு கீழ் குறைந்தால் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.
பிட்காயின் மட்டுமல்ல, மற்ற பெரிய கிரிப்டோகரன்சிகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. எத்தர் இந்த வாரம் 23 சதவீதம் இழந்துள்ளது. இதுவும் நவம்பர் 2022க்குப் பிறகு கண்ட மிகப்பெரிய வாராந்திர இழப்பு. சோலானா 88 டாலருக்கு குறைந்தது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் குறைந்த அளவு. இந்த வாரம் 24 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த நிலையில் சந்தை நிபுணர்கள் இதை "ரிஸ்க்-ஆஃப்" (risk-off) சூழல் என்று கூறுகின்றனர். இதில் முதலீட்டாளர்கள் ரிஸ்க் நிறைந்த சொத்துகளை தவிர்த்து தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளை நோக்கி செல்வது வழக்கம். ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் தங்கமாக தான் அழைக்கப்பட்டது தான் தற்போது வேடிக்கையான விஷயமாக மாறியுள்ளது.
மோனார்க் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஷிலியாங் டாங் கூறுகையில், கிரிப்டோ சந்தை ஒரு "நம்பிக்கை நெருக்கடியை" (crisis of faith) சந்தித்து வருகிறது என்றார்.
அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட பிட்காயின் ETFகளில் இருந்து 800 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு வெளியேறியுல்ளது. இந்த வார தொடக்கத்தில் சிறிய அளவிலான முதலீடுகள் அதிகரித்தாலும், பின்னர் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறியது.
இந்த ஆண்டு இதுவரை பிட்காயின் 20 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் கிரிப்டோ சந்தை மொத்த மதிப்பு $460 பில்லியன் இழந்துள்ளது. இது கிரிப்டோவின் பாதுகாப்பான சொத்து என்ற பெயரை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications