இந்தியாவில் தங்கம் முதலீடு மக்கள் மத்தியில் எப்போதும் பிரதானமாக இருக்கும் வேளையில், தற்போது இதில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக மக்கள் தங்கத்தை கடையில் சென்று பணத்தை கொடுத்து வாங்குவது தான் அதிகம், ஆனால் தற்போது விலை அதிகரித்திருக்கும் காரணத்தால் மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் யூபிஐ மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தரவுகளின்படி, யூபிஐ மூலம் டிஜிட்டல் தங்கம் சார்ந்த பரிவர்த்தனைகள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 9.977 கோடியாக உயர்ந்துள்ளது.

இது ஜனவரி மாதத்தில் 5.093 கோடியாக இருந்த நிலையில் தற்போது 95.89 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாற்றம், இந்தியர்களின் முதலீட்டு பழக்கத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை காட்டுகிறது.
2025ஆம் ஆண்டில் யூபிஐ மூலம் டிஜிட்டல் தங்க வாங்குவது ஜனவரியில் 761.60 கோடி ரூபாயாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, ஆகஸ்டில் 1,184 கோடி ரூபாயாக 55.4 சதவீதம் உயர்ந்தது. மேலும் பேடிஎம், கூகுள் பே, போன்பே போன்ற ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் மூலம், எம்எம்டிசி-பிஏஎம்பி, ஆக்மாண்ட் கோல்ட்டெக் மற்றும் டானிஷ்க், சென்கோ கோல்ட் போன்ற நகை நிறுவனங்களிடமிருந்து மக்கள் அதிகளவிலான தங்கத்தை வாங்குகின்றனர்.
இதன் மூலம் தங்க முதலீட்டில் செலவுகளை குறைக்க குறிப்பாக செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் காயின், பார்களாக வாங்கி வருகின்றனர். இதேபோல் தங்கத்தை பாதுகாப்பாக வைப்பதில் இருக்கும் பிரச்சனையை தீர்க்க மக்கள் டிஜிட்டல் தங்கமாக முதலீடு செய்து சேமிக்க துவங்கியுள்ளனர்.
தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் வாங்கி தள்ளும் நிலையில் இந்திய மக்களிடம் எவ்வளவு தங்கம் தான் இருக்கிறது..? உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) டிசம்பர் 2024 தரவுகளின்படி, இந்திய பெண்கள் உலகின் 11 சதவீத தங்கத்தை வைத்திருக்கின்றனர் என்றும், இந்த மக்களிடம் சுமார் 24,000 டன் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்கா கருவூலத்தில் இருக்கும் 8,000 டன் தங்கத்தை காட்டிலும் அதிகம். மேலும் ஜெர்மனி (3,300 டன்), இத்தாலி (2,450 டன்) உள்ளிட்ட டாப் ஐந்து நாடுகளின் தங்க இருப்பை ஒன்றாக சேர்த்தாலும் இந்திய மக்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அதிகம்.
டிஜிட்டல் தங்க முதலீடு மிகவும் எளிதானது என்பதாலும், சிறிய தொகைக்கும் வாங்க முடியும் என்பதாலும் மக்கள் தற்போது அதிகளவில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதற்கு ஏற்றார்போல் எம்எம்டிசி-பிஏஎம்பி, பேடிஎம், போன்பே போன்ற ஆப்கள் மூலம் சிறிய அளவு தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications