சென்னை: பாதுகாப்பான முதலீடு என வரும்போது பெரும்பாலான இந்தியர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். ஏனெனில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உதாரணமாக 2013 ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3000 ரூபாய் என இருந்தது அதுவே தற்போது 6,680 என்ற அளவை எட்டிவிட்டது.
தங்கத்தின் விலை உயர்கிறது என்பதற்காக அதனை நகையாக வாங்கி வைப்பது நமக்கு நஷ்டம் தான். ஏனெனில் உங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை நீங்கள் கொண்டு சென்று விற்பனை செய்தால் இன்றைய கட்டணத்திற்கு முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நகை கடைகளில் அதனை 25 முதல் 35% வரை கட்டணத்தை கழித்து தான் எடுத்துக் கொள்வார்கள். எனவே தங்கத்தை முதலீடாக கருதுபவர்கள் அதனை நகையாக வாங்க கூடாது என்கின்றனர் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள். இதற்கு என்னென்ன மாற்று இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் தங்கம்: எந்த ஒரு முதலீட்டு செயலியிலும் நீங்கள் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். 1 ரூபாயில் தொடங்கி கூட நீங்கள் தங்கத்தினை வாங்கலாம். உதாரணமாக நீங்கள் 10,000 ரூபாய்க்கு டிஜிட்டல் தங்கம் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொண்டால். அந்த நிறுவனம் அந்தத் தொகைக்கு தங்கத்தை வாங்கி அவர்கள் லாக்கரில் வைத்து விடும். இதற்கு அவர்கள் உங்களிடம் எந்த செய்கூலி சேதாரம் கட்டணங்களையும் வசூலிக்க மாட்டார்கள். ஆனால் மூன்று சதவீத ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்தி ஆக வேண்டும்.
உங்களுக்கு எப்பொழுது தேவைப்படுகிறதோ இந்த டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்து விடலாம், இதற்காக நீங்கள் அந்த நிறுவனத்திற்கு இத்தனை காலம் அந்த தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கான ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். அது 3 முதல் 6 சதவீதம் வரை இருக்கலாம்.
ஒருவேளை அந்த தங்கத்தை நீங்கள் விற்பனை செய்ய விரும்பாமல் வாங்கிக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு அதனை அனுப்பி வைக்கும். அதற்கான போக்குவரத்து கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதாக இருக்கும் .
தங்க மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டு செயலிகளிலேயே நீங்கள் தங்கத்தின் மீதான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும். வழக்கமான sip போலவே இதிலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கலாம். 500 ரூபாயிலிருந்து இதில் முதலீடு செய்ய முடியும். நீங்கள் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உங்களது முதலீட்டு பணத்தை கோல்ட் ஈடிஎஃப்-களில் முதலீடு செய்கின்றன. அந்த யூனிட்டின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க உங்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும்.
இவ்வாறு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை எட்டிய பிறகு இந்த தங்க மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால், அதற்கான ஒரு தொகையை குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்திற்கு செலுத்தி ஆக வேண்டி இருக்கும். இது நகைகளுக்கு நாம் செலுத்தும் செய்கூலி சேதாரம் கட்டணங்களை விட மிக குறைவாக தான் இருக்கும். இதில் நீங்கள் பணமாக திரும்ப பெற முடியுமே தவிர தங்கமாக பெற முடியாது.
தங்க ஈடிஎஃப் (ETF) பத்திரங்கள்: தங்க ஈடிஎஃப் பத்திரங்கள் என்பது நிறுவனங்கள் நேரடியாக தங்கத்தில் அல்லது தங்க சுரங்கங்களில் அல்லது தங்கம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய பத்திரங்கள். இந்த முறையில் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க இந்த பத்திரங்களின் மதிப்பும் அதிகரிக்கும்.
இதில் 1 கிராம், 2 கிராம் என்ற அளவீடுகளில் தான் முதலீடு செய்ய முடியும். இதற்கு கண்டிப்பாக டீமேட் கணக்கு இருக்க வேண்டும். இதிலும் மற்றவற்றை போல செய்கூலி செய்தார கட்டணங்கள் கிடையாது. இந்த பத்திரங்களை தேவைப்படும் போது நாம் விற்பனை செய்து பணமாக்கி கொள்ளலாம்.
இந்த மூன்று திட்டங்களிலுமே நீங்கள் முதலீடு செய்த 3 ஆண்டுகளுக்குள் திரும்ப பெற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும், 3 ஆண்டுகளுக்கு பின்னர் திரும்ப பெற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?



Click it and Unblock the Notifications