சென்னை: மத்திய அரசின் கஜானாவில் பெரும் பங்கு வகிக்கும் நேரடி வரி வசூல் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நேரடி வரி வசூல் கடந்த ஆண்டை விட 22.48 சதவிகிதம் அதிகரித்து ரூ.6.93 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறைமுக வரி விதிப்பை ஜிஎஸ்டி மாற்றியமைத்த நிலையில், நேரடி வரி வசூலில் பழைய முறைப்படி தொடர்கிறது. நேரடி வரி விதிப்பில் தனிநபர் வருமான வரி, கார்ப்ரேட் வரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் படி நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையிலான வசூல் தரவுகளின் படி நேரடி வரி விதிப்பில் தனிநபர் வருமான வரி வசூல் ரூ.4.47 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி வசூல் ரூ.2.22 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதோடு சரக்கு பரிவர்த்தனை வரி (STT) ரூ.21,599 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மற்ற வரிகள் ரூ.1,617 கோடி வசூலாகியுள்ளன.

மத்திய அரசின் தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை ரூ.1.20 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 33.49 சதவிகித அதிகமாகும்.
மேலும் மொத்த நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்து ரூ.8.13 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தனிநபர் வருமான வரி ரூ.4.82 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி ரூ.3.08 லட்சம் கோடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தனிநபர் வருமான வரி வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் ஆகஸ்ட் 11 நிலவரப்படி ரூ.3.91 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. அதேசமயம் 2024-25 நிதியாண்டில் ஆகஸ்ட் 11 நிலவரப்படி ரூ.4.81 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
இதை 2 விதமாகப் பார்க்க முடியும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அல்லது மக்களின் வரி சுமை அதிகரித்துள்ளது. அரசு தற்போதைய நிதியாண்டில் நேரடி வரிகளில் இருந்து ரூ.22.07 லட்சம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
நேரடி வரி வசூல் குறித்துப் பேசிய இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான மோகன்தாஸ் பாய், வரி வசூல் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் நிதியமைச்சகம் நடுத்தர வர்க்கத்திற்கு வழங்க வேண்டிய சலுகைகளைக் குறைத்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு நேற்று பணவீக்க தரவுகளை வெளியிட்ட நிலையில், ஜூலை மாதம் ரீடைல் பணவீக்கம் 3.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்ததால், இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச இலக்கான 4 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ரீடைல் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக 3.54 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதேபோல் நாட்டின் தொழில்துறை உற்பத்தி (IIP) ஜூன் மாதம் 4.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications