இந்தியாவில் 24 பெரிய இறக்குமதி நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி அதாவது IGST வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் (டிஜிஜிஐ) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஆகியவை இணைந்து கண்டறிந்துள்ளன.
இதுவரை சுமார் 24 வழக்குகளில் 11,000 கோடி ரூபாய் அளவிலான ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் அமைப்பின் மூத்த அதிகாரி எக்னாமிக்ஸ் டைம்ஸ்யிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்த இறக்குமதியாளர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 17 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியில் மத்திய வரி அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஐஜிஎஸ்டி-யில் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஸ்டீல், மருந்துகள், ரத்திணங்கள் மற்றும் நகைகள், ஜவுளித் துறைகளை சார்ந்தவையாக உள்ளது. ஜிஎஸ்டி வந்த பின்பு வரி ஏய்ப்பு, கருப்பு பணம் குறைக்கப்படும் என மத்திய அரசு நம்பினாலும், போலி ஈபில் வாயிலாகவும், குறைந்து மதிப்பிட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களாலும் அதிகப்படியான வரி ஏய்ப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தகைய வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை பல முக்கியமான முயற்சிகளை செய்து வருகிறது.

இந்த வரி ஏய்ப்பு விஷயங்களை ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகிய இரு அமைப்புகளும் மத்திய அரசு உருவாக்கிய Advanced Analytics in Indirect Taxation (ADVIT) மூலம் பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மறைமுக வரி துறை அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளையில் போலி பில், போலி ஜிஎஸ்டி பதிவு மற்றும் தவறான இன்புட் டாக்ஸ் கிரெடிட் ஆகியவற்றைக் கண்டறிய மே 16 முதல் இரண்டு மாத தீவிர ஆய்வுகளை இந்தியா முழுவதும் மத்திய நிதியமைச்சகம் தலைமையில் வரி அமைப்புகள் நாடு முழுவதும் தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications