இந்த வருட தீபாவளி நடுத்தர மக்களின் தீபாவளியாக இருக்கப்போகிறது என்றால் மிகையில்லை, பொதுவாக பண்டிகை காலத்தில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும். இந்த வருட பண்டிகை கொஞ்சம் ஸ்பெஷல், தள்ளுபடி விற்பனை ஜிஎஸ்டி வரி குறைப்புடன் வருவதால் பெரும்பாலான பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் கையில் அதிகப்படியான பணம் புரளும், அதேவேளையில் அதிகப்படியான வர்த்தகம் பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதில் முதல்கட்டமாக இந்தியாவின் நுகர்வோர் பொருட்களின் விலையில் தற்போது பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அதாவது செப்டம்பர் 22, 2025 முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஐஸ்கிரீம் முதல் சோப்பு, ஷாம்பூ வரை பல பொருட்களின் விலை குறையும். இந்த நிலையில் செப்டம்பர் 18 முதலே பல பொருட்கள் புதிய விலையில் பொருட்கள் கடைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 12% மற்றும் 18% ஜிஎஸ்டி வரிகளை 5% ஆக குறைக்கப்பட்டு உள்ள நிலையில் ஆட்டோமொபைல் முதல் உணவு பொருட்கள் வரையில் நிறுவனங்கள் புதிய விலையில் அச்சடிக்கப்பட்ட பொருட்க்ளை விற்பனையாளர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தப்படி அறிவித்தபடி, 12% ஜிஎஸ்டி வரி வகுப்பில் உள்ள 99% பொருட்கள் 5% ஆக குறைக்கப்படும். இந்த மாற்றம், செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும்.
ஜிஎஸ்டி குறைப்புக்காக நாட்டில் பல கோடி மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் வேளையில், சந்தையில் உருவாகும் டிமாண்ட்-ஐ சரிக்கட்ட கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி மாற்றம் அமலாக்கம் செய்யும் முன்பே புதிய விலையில் பொருட்களை அறிமுகம் செய்ய முயற்சித்துள்ளது.
தற்போது வெண்ணெய், சீஸ், மிட்டாய் மற்றும் ஸ்னாக்ஸ் பொருடக்ள் போன்றவை 12% வரியிலிருந்து 5% ஆக குறையும். பிஸ்கட், ஐஸ்கிரீம், சோப்பு மற்றும் டூத்பேஸ்ட் போன்றவை 18% வரியிலிருந்து 5% ஆக சரிந்துள்ளன.
இந்த விலை குறைப்பு பெரும்பாலானவை நடுத்தக குடும்பங்களின் தினசரி செலவுகளை குறைக்கும் விதமாக அமைந்துள்ளதால் நாட்டின் பெரும்பகுதி மக்கள் பலன் அடைய உள்ளனர். இதற்கு ஏற்றார் போல் நிறுவனங்களும் விலை குறைப்பை காலதாமதம் செய்யமல் வேகமாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். மேலும் நிறுவனங்கள், வரி வித்தியாசத்தை தங்களே ஏற்றுக்கொண்டு, புதிய விலைகளில் பொருட்களை விற்பனையாளர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளன.
நுகர்வோர் சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ப்ராக்டர் ஆண்ட் காம்பிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லோரியல், ஐடிசி மற்றும் பிரிட்டானியா போன்றவை தங்களுடைய விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை செய்தித்தாள் விளம்பரங்கள் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து குவிக் காமர்ஸ் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களும் இந்த விலை குறைப்புக்கு ஏற்ப புதிய விலையில் பொருட்களை விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பண்டிகை கால தள்ளுபடிகளை முன்னதாகவே தொடங்கியுள்ளன. இப்போ சொல்லுங்க இந்த வருட தீபாவளி எப்படி இருக்கும் என்று..?
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications