தங்கம் என்பது இனி வரும் காலங்களில் வெறும் கனவாகதான் இருக்கும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, இன்று (அக்டோபர் 17, 2025) கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தங்கம் வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைவதாக இல்லை.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 22 காரட் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.12,200 ஆக உள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.15000 எட்டும் என்ற நிலையைத் தாண்டி விற்பனையாவது, சந்தையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் (அக்டோபர் 17, 2025): நேற்று 22 காரட் ஒரு கிராம் ரூ.11,900 ஆக இருந்த தங்கம் இன்று ரூ.300 உயர்ந்து ரூ.12,200 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று 95,200 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.2400 உயர்ந்து ரூ.97,600 ஆக விற்பனையாகிறது. இன்று விலை குறையும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை மேலும் உயர்ந்துள்ளது.
24 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.1,03,856 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.2616 உயர்ந்து ரூ.1,06,472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.12,982 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.327 உயர்ந்து ரூ.13,309-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்: நேற்று ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.9830 ஆக இருந்த நிலையில், ரூ.270 உயர்ந்து ரூ.10,100 ஆக உள்ளது. அதேபோல், ஒரு சவரன் நேற்று ரூ.78,640 ஆக இருந்த நிலையில், ரூ.2160 அதிகரித்து ரூ.80,800 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்று விற்பனையான கிராம் ரூ.206 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.3 குறைந்து ரூ.203 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.3000 குறைந்து ரூ.2,03,000 ஆக விற்பனையாகிறது.
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications