தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் இருந்து இன்று வரை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. MCX சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,839 என்ற அதிகபட்ச விலையை எட்டியது, அதேசமயம் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,722 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று சில்லறை தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்தது.
கமாடிட்டி சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கத்தின் விலை ஏற்றம் புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதக் குறைப்பு மற்றும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக மாறுபடுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்த நிச்சயமற்ற நிலை தொடரும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, 2024-ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 தீபாவளிக்கு முன் தங்கம் வாங்கலாமா?:காமா ஜூவல்லரியின் எம்.டி., கொலின் ஷா, 2024 தீபாவளிக்கு முன் தங்கத்தை வாங்குமாறு முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தங்கம் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே பண்டிகைகளின் போது தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக, தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: 2024-ஆம் ஆண்டு தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தல்களை சுட்டிக்காட்டிய கொலின் ஷா, “அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், தங்கம் விலை சில ஏற்ற இறக்கங்களைக் காணக்கூடும். தேர்தல்களை விட, மத்திய வங்கியின் விகிதக் குறைப்பு முடிவு தேர்தலுக்குப் பிந்தைய விதிமுறைகளை பின்பற்றும், இது தங்கத்தின் விலையை பாதிக்கலாம். புவிசார் அரசியல் பதட்டங்கள் முதல் விகிதக் குறிப்பு வரை பல காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது.
SS WealthStreet-இன் நிறுவனரான சுகந்தா சச்தேவா, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளைக் கூறியுள்ளார்.
புவிசார் அரசியல் பதட்டங்கள்: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்கள், பதற்றங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் போன்றவை தங்கத்தின் மீதான தேவையை அதிகரித்துள்ளன. இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உலகளாவிய சந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பல முதலீட்டாளர்களும் தங்கத்தை பாதுகாப்பானதாக நினைத்து முதலீடு செய்கின்றனர். இதுவும் தங்கம் விலை அதிகரிக்க ஒரு காரணமாகிறது.
US FED விகிதக் குறைப்பு: அமெரிக்காவில் பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது. சமீபத்திய CPI தரவுகளின்படி பண வீக்கம் எதிர்பார்த்ததை விட உயர்ந்துள்ளது. இருப்பினும் ஆண்டு அதிகரிப்பு பிப்ரவரி 2021-ஆம் ஆண்டு முதல் மிகக் குறைந்த வேகத்தில் தான் உள்ளது. இதன் காரணமாக கூடுதல் விகிதக் குறிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தீபாவளி 2024: இந்தியாவின் பண்டிகைக் காலம், குறிப்பாக தீபாவளி, பொதுவாக தங்கத்தின் தேவையை அதிகரிக்கச் செய்கிறது, இது எதிர்காலத்தில் விலையை மேலும் ஆதரிக்கும்.
தீபாவளி 2024க்கு முன் தங்கம் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுகந்தா சச்தேவா, "இந்த காரணிகளை கருத்தில் கொண்டு, தீபாவளியின் போது தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீபாவளிக்கு முன் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். கூடுதலாக, அமெரிக்க தேர்தல் முடிவுகள் வரை தங்கத்தை வைத்திருப்பது, முதலீட்டாளர்களுக்கு தேர்தல் தொடர்பான நிச்சயமற்ற தன்மை மற்றும் கொள்கை மாற்றங்களால் விலை உயர்வை தவிர்க்க உதவும், தேர்தலுக்குப் பிறகு சரியான நேரத்தில் விற்பனை செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications