இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் தங்கம் விற்பனை புதிய பரிணாமத்தை பெற்றுள்ளது. பாரம்பரிய முறையில் நகைக்கடைகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நிற்பதற்கு பதிலாக, தற்பொழுது குயிக் காமர்ஸ் செயலிகளான இன்ஸ்டாமார்க், செப்டோ, பிளிங்கிட் வழியே தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.
வீட்டில் இருந்தே குயிக் காமர்ஸ் செயலிகளான பிளிங்கிட் , செப்டோ மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்றவற்றில் புக் செய்து உடனடியாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை டெலிவரி பெறலாம். தங்கம் மற்றும் வெள்ளியை நாணயமாக தான் வாங்க போகிறேன் என்பவர்கள், இதற்காக போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு கடைக்கு சென்று தங்க நாணயம் வாங்குவதை விட வீட்டிலேயே நிம்மதியாக ஒரு கிளிக்கில் ஆர்டர் செய்து தங்க நாணயத்தை வாங்கலாம்.

அந்த வகையில் தீபாவளி விற்பனையின் ஒரு பகுதியாக செப்டோ செயலியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 14,000-க்கும் மேற்பட்ட தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித் பாலிச்சா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
செப்டோ மட்டுமல்லாமல், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் , பிளிப்கார்ட் மினிட்ஸ், பிளிங்கிட் போன்ற பல்வேறு குயிக் காமர்ஸ் செயலிகளும் இந்த தீபாவளியில் வரலாறு காணாத அளவுக்கு ஆர்டர்களை பெற்றுள்ளன. சில நிமிடங்களில் சுத்தமான தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து சேர்வதால், மக்கள் பாரம்பரிய முறையிலிருந்து டிஜிட்டல் விரைவு வணிகத்தை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
தங்கம், வெள்ளி நாணயங்கள் மட்டுமின்றி, தீபாவளி பூஜைக்கு தேவையான பொருட்கள், மிட்டாய்கள், உலர் பழங்கள், விளக்குகள் மற்றும் பரிச பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களையும் மக்கள் இப்போது சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் செயலிகள் மூலமாகவே ஆர்டர் செய்து பெறுகின்றனர். நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னணி குயிக்-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது சேவைகளை இந்த தீபாவளிக்கு தீவிரப்படுத்தியுள்ளன.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் இந்த ஆண்டு தங்க நாணய டெலிவரி 23 மடங்கு அதிகரித்துள்ளதாம். பெரும்பாலான மக்கள் ஒரு கிராம் மற்றும் அரை கிராம் நாணயங்களை தான் அதிகம் வாங்கியுள்ளனர். அதே வெள்ளி நாணய ஆர்டரும் 7 ம்டங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகமாக பெங்களூரில் தான் கோல்டு காய்ன் ஆர்டர்கள் வந்துள்ளதாம்.
ஒரு நபர் ஒரே முறையில் 1.73 லட்சம் ரூபாய்க்கு தங்க நாணயங்களை ஆர்டர் செய்துள்ளார். இது இந்த தீபாவளிக்கு கிடைத்த அதிக மதிப்பு கொண்ட ஆர்டராக உள்ளது. அதே போல நொய்டாவை சேர்ந்த ஒரு நபர் 5 லட்சம் ரூபாய்க்கு 9 முறை தங்க நாணயங்களை ஆர்டர் செய்து டெலிவரி பெற்றுள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

