அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுபோல் தான் பங்குச் சந்தையில் எப்போது ஒரு பங்கின் விலை உயரும் அல்லது குறையும் என்று யாராலும் கணிக்க முடியாது. உச்சத்தில் இருந்த பங்கு விலை சில தினங்களில் கடும் சரிவை சந்திக்கும். இதற்கு உதாரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை குறிப்பிடலாம்.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அதானி குழும நிறுவன பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்தன. சில பங்குகள் விலை யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு சில வர்ததக தினங்களில் விறுவிறுவென ஏறும். இதற்கு உதாரணமாக டிக்சன் டெக்னாலஜிஸ் பங்குகளை சொல்லலாம்.

இந்திய பன்னாட்டு மின்னணு உற்பத்தி சேவை நிறுவனம் டிக்சன் டெக்னாலஜிஸ், இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் ஜியோமி ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்காக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கடந்த நவம்பர் 30ம் தேதியன்று புதிய அதிநவீன ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலையை தொடங்கியது. நொய்டாவில் 2.7 லட்சம் சதுர அடியில் இந்த ஆலை கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 25 லட்சம் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் திறனை கொண்டது. இந்நிறுவனம் ஜியோமி இந்தியா நிறுவனத்துடன் 5 ஆண்டு கால நீண்ட தொடர்பை கொண்டுள்ளது.
ஜியோமி ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்காக நொய்டாவில் புதிய ஆலை தொடங்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 52 வார கால புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு விலை ரூ.5,508.90ஆக இருந்தது. நொய்டா ஆலை செய்தி எதிரொலியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவன பங்கின் விலை உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே பங்கு விலை அதிகபட்சமாக ரூ.6,034.75 வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும். பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.440.80 (8 சதவீதம்) உயர்ந்து ரூ.5,949.70ல் முடிவடைந்தது.
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. இந்நிறுவனம் 2023 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.2,072.58 கோடியும், நிகர லாபமாக ரூ.57.25 கோடியும் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின நொய்டா ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலையை மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி. துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிக்சனின் புதிய ஆலை 5,000 வேலைகளை உருவாக்கும். மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் மொபைல் போன் துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளது என்று தெரிவித்தார்.
அண்மையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழ்நாட்டில் ஒசூரில் உள்ள டாடா ஐபோன் ஆலையை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவில் விற்பனையாகும் போன்களில் 99 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் 99.2 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. மொபைல் தயாரிப்பு தொழில் சந்தை மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications