மும்பை: நாம வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன்பு நமக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அல்லது நபரிடம் ஆலோசனை கேட்போம். உலகின் பிரபல தொழிலதிபர்களும், மெகா கோடீஸ்வரர்களும் அப்படித்தான் தங்களது வர்த்தகம் தொடர்பான எந்தவொரு முடிவையும் அவர்களது நம்பிக்கைக்குரிய நபருடன் கலந்தோசிக்காமல் எடுக்கமாட்டார்கள். அப்படி முகேஷ் அம்பானி, இஷா அம்பானி, ரத்தன் டாடா மற்றும் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களின் வலது கையாக இருக்கும் அல்லது அவர் தலையை அசைத்தால் தான் இவர் கையெழுத்து போடுவார் என்ற அளவில் இருக்கும் நம்பிக்கைக்குரிய நபர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முகேஷ் அம்பானி-மனோஜ் மோடி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி ஒரு தொலைநோக்கு தொழில்முனைவோர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் எடுக்கும் திட்டமிடப்பட்ட ரிஸ்க். இதற்கு உதாரணமாக ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவை அறிமுகத்தை சொல்லலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலம் வரை வாய்ஸ் கால் மற்றும் டேட்டாவை இலவசமாக கொடுத்து மக்களை தனது ஜியோ சேவையை பயன்படுத்த வைத்து பின்பு கட்டணத்தை விதித்து சம்பாதிக்க ஆரம்பித்தார். முகேஷ் அம்பானியின் வெற்றியின் பின்னணியில் முக்கியமான ஒரு நபர் ஒருவர் உள்ளார். அவர் மனோஜ் மோடி. இவர் முகேஷ் அம்பாயின் கல்லூரி கால தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் மோடி, முகேஷ் அம்பானியின் வலது கை என்று அழைக்கப்படுகிறார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்ப துறையில் முகேஷ் அம்பானியின் வகுப்பு தோழர். அப்போது இருந்தே அவர்கள் இருவரும் தளபதி பட ரஜினி-மம்முட்டி மாதிரி அவ்வளவு நெருக்கமான நட்புடன் இருந்து வருகிறார்கள். முகேஷ் அம்பானிக்கு அனைத்து முக்கியமான ஒப்பந்தங்களிலும் ஆலோசனை வழங்குகிறார். 2020ல் பேஸ்புக்குடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் செய்தது அதன் பின்னணியில் இவர் மூளையாக இருந்தார். ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் இயக்குனராக உள்ளார். முகேஷ் அம்பானி தனது நெருங்கிய உதவியாளரான மனோஜ் மோடிக்கு மும்பையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான 22 மாடி சொத்தை பரிசாக கொடுத்தார். இது மும்பையின் ஆடம்பரமான நேபியின் கடல் சாலையில் 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இஷா அம்பானி-பக்தி மோடி: முகேஷ் அம்பானி-மனோஜ் மோடியின் இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனோஜ் மோடியின் மகளான பக்தி மோடிதான் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு எல்லாமுமாக இருக்கிறார். இஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இவர் உள்ளார். ரிலையன்ஸ் பிராண்ட்ஸில் மேலாண்மை பயிற்சியாளராக தொடங்கி பல ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இன்று இஷா அம்பானியின் வலது கை என்று அவரை அழைக்கின்றனர். ரிலையன்ஸ் ரீடெய்ல் விற்பனையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தலைமை குழுவில் பக்தி மோடி ஒரு அங்கமாக உள்ளார். இவர் ரிலையன்ஸ் பிராண்டுகளின் இயக்குனராகவும், அழகு சாதன பொருட்கள் தளமான தீராவின் இணை நிறுவனராகவும் உள்ளார். மேலும் அவர் பிராண்டின் உத்தி மற்றும் செயல்படுத்தலை கவனித்து வருகிறார்.

ரத்தன் டாடா-சாந்தனு நாயுடு: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. இவர் டாடா குழுமத்தின் தலைவர் மற்றும் பல லட்சம் கோடி மதிப்பிலான டாடா குழும வணிகத்தை வெற்றிக்கு இட்டும் செல்லும் பொறுப்பு இவரிடம் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆதரவு தேவை, ரத்தன் டாடாவுக்கு உதவியாக இருப்பவர் 30 வயதான சாந்தனு என்ற இளைஞர். சாந்தனு தனது தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெருநாய்களை பராமரிக்கும் போது ரத்தன் டாடா கண்ணில் பட்டார். அந்த இளைஞனின் நடவடிக்கை டாடாவை ஈர்த்தது. இதனையடுத்து அவரை தனது உதவியாளராக தன்னுடன் வைத்துக் கொண்டார். 2018ல் டாடா நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்.. தற்போது டாடாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அவரது நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். ரத்தன் நேவல் டாடாவின் அலுவலகத்தில் பொது மேலாளராக டாடா குழுமத்தால் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

வாரன் பபெட்-சார்லி முங்கர்: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளருமான வாரன் பபெட்டின் வலது கையாக இருந்தவர் சார்லி முங்கர். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 99 வயதில் காலமானார். இவரது மறைவு வாரன் பபெட்டுக்கு மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. பெர்க்ஷயர் ஹொத்வே நிறுவனத்தில் வாரிசு திட்டம் இருந்த போதிலும் அவரது யாராலும் நிரப்ப முடியாது என்று வாரன் பபெட் தெரிவித்தார். வாரன் படெட்டுன் சேர்ந்த சார்லி முங்கர் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களால் மதிக்கப்பட்டார் மற்றும் போற்றப்பட்டார். பெர்க்ஷயர் ஹொத்வே நிறுவனத்தின் துணை தலைவராக ஆனது முதல் மூலதனத்தை ஒதுக்கீடு செய்வதில் நெருக்கமாக பணியாற்றினார். தனது நண்பரும், வர்த்தக பங்குதாரருமான படெட் தவறு செய்கிறார் என்று நினைத்தபோது தைரியமாக சொன்னார். செர்ரி லேன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பங்குதாரர் ரிக் மெல்லர் கூறுகையில், அவர் நிச்சயமாக சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்தார், பபெட்டுடன் ஒரு குழுவாக இருந்தார். தனிப்பட்டமுறையில் பபெட்டுக்கு இது (சார்லி மரணம்) மிகப்பெரிய இழப்பு என தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications